புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013




           ""ஹலோ தலைவரே... கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் எந்தளவுக்கு கோல்மால் நடந்திருக்குங்கிறதை நம்ம நக்கீரன்தான் பக்கம் பக்கமா தோலுரிச்சுக் காட்டியிருந்தது. பார்த்தீங்களா?''nakeeran

""வேறெந்த ஊடகங்களிலும் இதுபற்றி கவனம் செலுத்தலையே.. வாழ்க ஜனநாயகமும் ஊடக தர்மமும்.''…

""தலைவரே.. முறைகேடான தேர்தல்னு சொல்லி பெரிய கட்சியான தி.மு.க இந்தத் தேர்தலையே புறக்கணிச்சிடிச்சி. சி.பி.எம், பா.ம.க, தே.மு.தி.க, சி.பி.ஐ. போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் பங்கெடுத்தாங்க. நாமினேஷனிலிருந்து கவுன்ட்டிங் வரைக்கும் அவங்களுக்கு ஆளுந்தரப்பிலிருந்து பல நெருக்கடிகள். அவங்களால சமாளிக்கவும் முடியலை. ஜெயிக்கவும் முடியலை.''

""இதற்கெல்லாம்  என்ன காரணம்? ஆளுந்தரப்பின் திட்டமிட்ட செயல்பாடுகள்தானா?''

""சி.பி.எம். தரப்பில் இது சம்பந்தமா ஒரு ரிப்போர்ட்  கலெக்ட் பண்ணியிருக்காங்க. அ.தி.மு.க அரசின் அனைத்து அமைச்சர்களும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக் காங்க. ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ள கூட்டுறவு ஜாயிண்ட் ரெஜிஸ்ட்ராரிடம், அந்தந்த மாவட்ட மந்திரி கொடுக்கிற லிஸ்ட்படிதான் கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவு வரணும்னு ஸ்ட்ரிக்ட் டா சொன்ன செல்லூர் ராஜூ, மற்ற கட்சிக்காரங்க நாமினே ஷன் பாரம் கேட் டால் கொடுங்க, தேர்தலை நடத்துற மாதிரி நடத்துங்க. ஆனா ரிசல்ட் மட்டும் நாங்க சொல்ற  மாதிரி இருக்கணும்னு உத் தரவிட்டிருக்காரு.''

""அமைச்சர் உத்தரவை அதிகாரிகள் மீற முடியுமா?''

""ஆமாங்க தலைவரே.. தங்களுக்கு சாதகமான அதிகாரிகளையே தேர்தல் பொறுப்புக்கு நியமிச்ச ஜாயின்ட் செகரட்டரிகள், 12ஆயிரம் கூட்டுறவு சங்கங்களில் உள்ள பதவிகளில் 95 சதவீதத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் லிஸ்ட்படிதான் நிரப்பியிருக் காங்க. கூட்டுறவு சங்கத்துக் கான முதல்கட்ட, இரண் டாம்கட்ட தேர்தலின் முடிவு கள் இப்படித்தான் இருக் குதுன்னு சி.பி.எம் ரிப்   போர்ட் சொல்லுதாம். அதே நேரத்தில், சங்க உறுப் பினர்களையே ஓட்டுப் போட விடாமல் ஆளுந்தரப்பு பல இடங்களிலும் விரட்டியடித் திருப்பதால், சங்க உறுப் பினர்களா உள்ள விவசாயி கள் ஆளுங்கட்சி  மீது கடும் அதிருப்தியில் இருப்பதா உளவுத்துறை எடுத்த ரிப் போர்ட்டில் தெரிய வந்தி ருக்குதாம்.''

""தமிழர்களின் கனவுத் திட்டம், அண்ணா  முன்னெடுத்த திட்டம்னு சொல்லப்படும் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பா தமிழக அரசு தன்னோட அறிக்கை யைத் தாக்கல் செய்யணும்னு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டி ருக்குதே.. கோர்ட்டில் ஜெ. அரசு என்ன ரிப்போர்ட் தரப்போகுதாம்?''


""அண்ணா  பெயரில் கட்சி நடத்தினாலும்  அவரோட கனவுத் திட்டமான சேது சமுத் திரத் திட்டத்துக்கு எதிராகத்தான் கோர்ட்டில் பதில் தாக்கல் செய்யப் போகுது ஜெ. அரசு. அ.தி.மு.க கூட்டணியை நம்பி யுள்ள சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க போன்ற கட்சிகள் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும்னு சொல்கிற கட்சிகள். அந்தக் கட்சிகளின் நிர்வாகிகள் பலரும், இந்தத் திட்டத்தை ஆதரித்து  சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யணும்னு அரசாங் கத்தை வலியுறுத்தி நம்ம கட்சி சார்பில் கோரிக்கை வைப்போம்னு சொல்லியிருக்காங்க. கட்சித் தலைமையில் இருப் பவங்களோ, இப்ப எதுவும் சொல்லவேண்டாம். தமிழக அரசு தன்னோட அறிக்கையைத் தாக் கல் செய்ததும் நாம் அதைக் கண்டிச்சி ஒரு அறிக்கை விட்டுடுவோம்னு சொல்றாங்களாம்.''

""அடேங்கப்பா… தமிழர் நலனில் எவ்வளவு அக்கறை!''

""ஆளுங்கட்சியை அனு சரித்துப் போனால் மட்டும் தான் இங்கே எதிர்க்கட்சியாக இருக்க முடியும் போல! இல்லைன்னா, பொதுக்கூட்டம்-பேரணி எது நடத்துவதா இருந்தாலும் கோர்ட்டுக்குப் போய்த்தான் ஆர்டர் வாங்க வேண்டியிருக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி  நடத்தப்படும் அம்பேத்கர்  பிறந்தநாள் விழாவை இந்த  வருடம் மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடத்த அனுமதி கேட்டப்ப, அது நெருக்கடியான இடமாக இருக் கிறதுன்னு சொல்லி போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. அடுத்ததா, தீவுத்திடலைத்தான் சிறுத்தைகள் தரப்பு செலக்ட் பண்ணியிருக்கு.''

""அதற்காவது அனுமதி கிடைத்ததா?''

""முறைப்படி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த தோடு, சுற்றுலாத்துறை இயக்குநர் ஹேமந்த்குமார்  சின்கா ஐ.ஏ.எஸ்ஸை திருமாவளவனே நேரில் சந்தித்து அனுமதி கேட்டிருக்கிறார். அப்பவும் ஒரு கடிதத்தை 

திருமாவே கொடுத்திருக்கிறார். உடனே ஐ.ஏ.எஸ் அதிகாரி மேலிடத்திடம் பேசிவிட்டு, வேற புரோகிராம் இருப்பதால் தீவுத்திடலில் விழா நடத்த அனுமதி இல்லைன்னு சொல்லி யிருக்காரு. வேற புரோகிராம் இருக்குன்னு எழுதிக் கொடுங்கன்னு திருமாவளவன் கேட்டப்ப, அதிகாரி எழுதித்தரலை. அதனால், கோர்ட்டுக்குப் போய் அனுமதி வாங்கு வதற்கான கடைசி கட்ட முயற்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேகமா இருக்காங்க.''

""தனிக்கட்சி தொடங்குவதில் ஜி.கே.வாசன் தீவிரமா இருப்பதாக ஓயாமல் செய்திகள் வருதே.''… … 

""அவர்  தரப்பிலிருந்து மாறி மாறி செய்திகள் வருதுப்பா.. டெல்லியில் வாசனை மீடியா நண்பர்கள் இருவர் பார்த்தப்ப, எனக்கு அந்த ஐடியா இல்லை. அய்யா மூப்பனார் த.மா.கா ஆரம்பித்தபோது இருந்த நிலைமை இப்ப இல்லை. இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் சில ஒர்க்-அவுட்டுகளை செய்தால் சரியா இருக்கும்னுதான் ராகுலை சந்திச்சப்ப சொன்னேன்னு சொல்லியிருக்காரு. ஆனா, சென்னைக்கு வந்தபிறகு ஞாயிற்றுக்கிழமை சோ வீட்டுக்குப் போய் மதியம் இரண்டரை மணியிலிருந்து ஐந்து மணி வரை அவர்கிட்டே பேசியிருக்கிறார். ஆடிட்டர் குருமூர்த்தியும் பக்கத்தில் இருந்தாராம்.'' 

""என்ன பேசினாங்களாம்?''

""நீங்க நல்லா அரசியல் பண்றீங்கன்னு வாசன்கிட்டே சொன்ன சோ, தனிக்கட்சி ஆரம் பித்தால் நல்லா இருக்கும்னும், அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்வதற்கும் வசதியாக இருக் கும்னும் சொல்லியிருக்காரு. வாசனும், நான் அதற்காகத்       தான் ஒர்க்-அவுட் பண்ணிக் கிட்டிருக்கேன்னு சோகிட்டே சொல்லியிருக்காரு. கொழும்        பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந் துக்கக்கூடாதுன்னும் அந்த மாநாட்டை வேறு நாட்டில் நடத்த ஏற்பாடு செய்யணும்னும் வாசன் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டிருப்பதற்குக் காரணம்கூட, எப்படியும் இதை மத்திய அரசு ஏற்காது. அதையே காரணம் காட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனிக்கட்சி ஆரம் பிச்சிடலாம்ங்கிறதுதானாம்.''

""கனிமொழி திடீர்னு மதுரைக்கு வந்து அழகிரியை சந்தித்தது பற்றி நாமகூட டீடெய்லா பேசியிருந்தோம். அதற்கப்புறம் தி.மு.கவில் என்ன டெவலப்மெண்ட்?''

""மதுரை தி.மு.க.வில் சஸ்பெண்ட் செய் யப்பட்ட ஸ்டாலின் ஆதரவாளர்கள் இது பற்றி சென்னையில் முறையிட, நான் பார்த் துக்கிறேன்னு மு.க.ஸ்டாலின்  சொல்லி யிருந்ததையும் பேசியிருந்தோம். அதன்படி, அவரோட மதுரை ஆதரவாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டிருக்கு. இதற்கிடையில், மதுரை மா.செ. தளபதி சென்னைக்கு வந்து கலைஞரை சந்தித்து தேர்தல் நிதி கொடுக்கணும்னு சொல்லியிருக்காரு.. எவ்வளவு நிதின்னு கலைஞர் கேட்க, குறைவாகத்தான் கலெக்ட் ஆகியிருக்குன்னு தளபதி சொல்ல, ஏன் குறைந்ததுன்னு   கலைஞர் கேட்டிருக்காரு. நாங்க வசூலுக்குப் போனால் அழகிரியண்ணன் பெயரைச் சொல்லித் தடுக்குறாங்கன்னு தளபதி சொல்லி யிருக்காரு.''

""ம்''…

""அதற்கு கலைஞர், அழகிரி பெயரை சொல்லிட்டால் காரணம் கேட்கமாட்டேன்னுதான்னே இப்படி சொல்றீங்க? கட்சிப் பணிகளை ஒழுங்கா நிறைவேற்ற முடியும்னா மா.செ. பொறுப்பில் இருங்க. இல்லைன்னா விலகிடுங்க. நான் வேலுச் சாமியை  மா.செ.வாக்கலாம்னு நினைக்கிறேன். பொன்.முத்து ராமலிங்கம்தான் தடுத்துக்கிட்டிருக்கிறார்னு குரலை உயர்த்திச் சொல்லியிருக்கிறார். துரைமுருகன் பேசிய பொதுக் கூட்டத்தில் கலந்துக்காத அழகிரி ஆதரவாளர்கள் மேலே நடவடிக்கை எடுத்தால்தான் என்னை லோக்கலில் மதிப்பாங்கன்னு மா.செ.தளபதி  சொல்ல, அதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுப்பதா இல்லைன்னு கலைஞர் சொல்லிட்டாராம்.''

 லாஸ்ட் புல்லட்!

புதுச்சேரியில் சீனியர் எஸ்.பியாக இருந்த ஸ்ரீகாந்த் பொதுச்சேவை களில் ஈடுபட்டு, புதுச்சேரி போலீஸில் ஒரு எம்.ஜி.ஆர் என்று பொது மக்களிடம் பெயர் எடுத்தவர். அந்தமான் தீவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் சிறப்பாக செயல்பட்டு வந்த உயரதிகாரி ஸ்ரீகாந்த், மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி புதுச்சேரி மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சிந்தனையாளரும் எழுத்தாளருமான அந்த காவல்துறை அதிகாரி, நாட்டில் அதிகரிக்கும் ஊழல் என்பது எய்ட்ஸை விட கொடுமையானது. ஊழலில் ஈடுபடுபவர் களையெல்லாம்  ஒரு கப்பலில் ஏற்றி நடுக் கடலில் கொண்டுபோய் தள்ளிவிட்டுவிடவேண்டும். கல்வியும் மருத்துவமும் அரசுடைமையானால்தான் சமுதாயம் முன்னேறும் என்று அடிக்கடி  சொல்லிவந்தவர். சீனியர் எஸ்.பி. ஸ்ரீகாந்த்தின் மரணத்தை  சொந்த இழப்பாக நினைக்கிறார்கள் புதுவை மக்கள்.

சென்னை  மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து தி.மு.க நடத்திய பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்திற்கான விளம்பரங்களில் தன்னுடைய படத்தைவிட கலைஞர்  படமே பெரிதாக இருக்கவேண்டும் என்று ஸ்டாலின் திடீரென உத்தரவிட அதன்படியே அவசரஅவசரமாக  விளம்பரங் கள் மாற்றப்பட்டன. சுவரொட்டிகளில் கலைஞரின் படம்  மட்டுமே இருந்தது. ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை.
முன்னாள் துணை சபாநாயகரும் தி.மு.க துணைப்  பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமி பொதுக்கூட்டத் தில் பேசியபோது, தி.மு.க ஆட்சியை மைனாரிட்டி அரசு என்றே இன்றும் சொல்லி வருகிறார் ஜெ. அவர் சட்டமன்றத்தில் எல்லாவற்றையும் 110விதியின் கீழ் அறிக்கையாக வெளியிடுவதால் இனி ஜெ. அரசை 110 ஆட்சி என்றுதான் சொல்லவேண்டும் எனப் பேச கூட்டத்தில் பலத்த கைதட்டல்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் சூடுபிடிக்கத்  தொடங்கியுள்ள நிலையில், எடியூரப்பா கட்சி சார்பில் சிவாஜிநகர் தொகுதியிலும் சர் சி.வி.ராமன் தொகுதியிலும் வேட்பாளர்களாகத் தமிழர்கள்  களமிறங்குகிறார்கள். “தேசிய கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.கவும் தமிழர் நலனைப் புறக்கணிக்கின்றன. தமிழர்களுக்கு சீட்கூட கொடுக்கவில்லை. காவிரியில் ஓரளவு தண்ணீர் திறந்துவிட்டவர் எடியூரப்பா. பெங்களுரில் திருவள்ளுவர்  சிலை திறக்கப்பட காரணமாக இருந்தவரும் அவர்தான் என்கிறார்கள்.

ad

ad