புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2013


கருணா அம்மானுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி பறிபோனது
ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்ததிலிருந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அதன்போது அவருக்கு ஜனாதிபதி அவர்களினால் கட்சியின் உபதலைவர்கள் இருவரில் ஒருவராக நியமனம் வழங்கி அவரை கட்சியின் உயர் பீட உறுப்பினராக செயற்படுத்தி வந்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்படி கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்றதன் பின்பு கட்சியின் உள்ளார்ந்த ரீதியாக பல மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதில் பிரதான ஒரு அங்கமாக ஸ்ரீலஙகா சுதந்திரக் கட்சியன் உபதலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த விநாயகமூர்த்தி முரளிதரனை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் அப்பதவியினை தற்போது பதவி வகிக்கும் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கத்திட்டம் தீட்டியுள்ளதாகவும் மேற்படி கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad