புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2013




          ரு க்ரைம் படத்திற்கே உண்டான த்ரில்லோடும், திகிலோடும் நடந்து முடிந்துள்ளது சேலம் சாந்தியின் கொலையும், அதைச் சுற்றிய  மர்மங்களும்.
nakkeran
யாரிந்த சாந்தி?

27-ந் தேதி வரை சாதாரண மக்களுக்கு சாந்தி யாரென்றே தெரியாது. ஆனால் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காடு லட்சுமி நாராயணா குடியிருப்பில், கழுத்து அறுக்கப்பட்டு சாந்தி கொடூரமாக கொல்லப்பட்டு இருந்த சேதி பரவியதும் நிழல் உலக புள்ளிகள் தொடங்கி... அரசியல் புள்ளிகள் வரை கொஞ்சம் கதிகலங்கித்தான் போனார்கள். பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு பல்வேறு இடத்திலிருந்தும் மாறி மாறி போன் கால்கள் வந்தபடியே இருக்க அனைவரும் கேட்ட ஒரே கேள்வி... "சாந்தி போன் லிஸ்ட்டில் என் பெயரும் உள்ளதா?'

இப்படி எல்லோரையும் "சாந்தி'யில்லாமல் கலங்கடித்த அந்த சாந்தி விபச்சார உலகில் கொடி கட்டி பறந்த "குயின் லேடி'.

""15 வயதிலேயே கட்டிட மேஸ்திரி சுப்ரமணிக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இவ ளுக்கு பெண் ஒன்று ஆண் ஒன்று பிறந்தபின் கல்யாண வாழ்க்கை கசந்து விட கணவரிடம் இருந்து பிரிகிறாள். சேலம் ஸ்டீல் பிளான்ட் அருகே கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவள் என்பதால் அங்கிருந்த ஆலைகளுக்கு வருபவர்கள் சிலர் இவளுக்கு அறிமுகமாக அதில் ஒரு வட நாட்டு தொழி லாளியோடு  நெருக்கமாகிறாள். சில காலத்தில் இந்த பழம் புளித்தது என நழுவிய வடநாட்டுக்காரர், தன்னுடைய நண்பர்கள் சிலரை அறிமுகம் செய்ய... சூழலால் விபச்சாரத்திற்குள் விழுகிறாள் தற்போது 40 வயதான சாந்தி'' -ஜாதகத்தைக் கூறினர் ஊர் பெருசுகள். இதன் தொடர்ச்சியாக காக்கிகள் சொன்ன விசயங்களோ... "ஒரு விலைமகளின் மறுபக்கம்' எனுமளவு அந்தரங்கத்தை வெட்ட வெளிச்சமாக்கியது.


""நாளாவட்டத்தில் சாந்தியைத் தேடி பலர் வர... அவள் தொழில் ஓகோவென வளர்ந்தது. சாந்தி யின் சிரித்த முகமும், அக்கம் பக்கத்திடம் அன்பாக பேசும் பழக்கமும் எங்கு குடி போனாலும் அவள்மேல் சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டது. மறுபுறம் அவளின் தொழில் எல்லாம் ஹோட்டல், ரிசார்ட்டுகளில்தான். குறிப்பா மாநாடு, கட்சி நிகழ்வுகள் வரும் போது இவள் கடை விரிப்பாள். அப்படிதான் சில "புள்ளிகளை' தன் வலைக்குள் வீழ்த்தினாள். எந்நேரமும் ஏதாவது தின்பண்டங் கள் கொறிச்சுகிட்டே இருக்குற ஒரு "வளமான' அரசியல் புள்ளி சாந்தியோட கம்பெனிக்கு ரெகுலர் கஸ்டமர்னா பார்த்துக் கோங்க. ஏற்காடு ரிசார்ட்டில்  பல முறை சாந்தியின் நிறுவனம் இவருக்கு "விருந்து' கொடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுக்கவே வெளியே தெரியாமல் இவள் புகழ் பரவியது.

வயசுப் பெண்கள் -குறிப்பா வெளி மாநிலத்தில் இருந்து இங்கு படிக்க வரும் பெண்களை பேசி தொழி லுக்கு இழுப்பாள். ப்ரீ-பெய்ட், போஸ்ட்-பெய்ட் என இரண்டு கேட்டகிரி வைத் திருப்பாள். அவ்வப்போது தொழிலுக்கு வரும் பெண்கள் ப்ரீ-பெய்ட். ரெகுலராக வரு பவர்கள் போஸ்ட்-பெய்ட். தொழிலுக்கு வரும் பெண் களுக்கும் இவள்மேல் நம்பிக் கை உண்டு....'' என்றவர்கள், ""10 வருடம் முன் தனியார் இன் சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிற பாலசுப்ரமணிய பிடிச்சுப் போயி அவரோட மனைவியா குடும்பம் நடத்த ஆரம்பிச்சா சாந்தி. அவரோடதான் இந்த இடத்துல ஒரு மாசம் முன்னாடி குடி வந்தா. தொழிலை தனியா நடத்திவந் தாள். இவகிட்ட 1000 ரூபாய்க்கும்  பொண்ணு கிடைக்கும் 10,000 ரூபாய்க்கும் பொண்ணு கிடைக்கும்... இதுதான் சாந்தியை நம்பி தொடர்ந்து கஸ்டமர்கள் வர காரணம். ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நடத்திவந்த சாந்தி திடீர்னு கொல்லப்படவும் எங்களுக்கு இது முக்கியமான கேசானது. அதனால் லீவில் இருந்த செந்தில்குமார் இன்ஸ்பெக்டரை கூப்பிட அவரின் முயற்சி வெற்றியை தந்தது'' என்றவர்கள் ஒரு இடைவெளிவிட்டு தொடர்ந்தனர்.

""சாந்தியோட செல்போன் மூலம் அவளுக்கு வந்த, போன ஏன்... மிஸ்டுகால்ஸ் வரை, எல்லாத்தையும்  கலெக்ட் செய் தோம். அதுலதான் இறுதியா திருப்பூரில் இந்த ரெண்டு பேரும் மறைஞ்சு இருக்கிறது தெரிஞ்சு, செந்தில் சார் இவனுங் கள தூக்கினாரு'' என்று முரளி, விஜயகுமார் இருவரையும் காட்டினர். ""ரெண்டுபேரும் படிச்ச பசங்க. முரளி எம்.ஏ. முதல் வருடத்தோடு நின்னுட்டான். சின்ன சபலம், இப்படி ஒரு கொலையும் செய்ய வைத்து, சிறைக்குள்ளும் தள்ளிவிட்டதே'' என்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை கூறினார்.

முரளி, விஜயகுமார் வாயிலாக அது அப்படியே...

""சாந்தி ஒரு கேஸ்ல கைதானபோது பேப்பர்ல பார்த் தோம். அதுல இருந்து எங்களுக்கு பிடிச்சது. அன்னைக்கு திடீர்னு சபலப்பட்டு சாந்திக்கு போன் செஞ்சுட்டு நேர்ல போனோம். "என்னடா 1000 ரூபா சொல்லிட்டு ரெண்டு பேரு வந்திருக்கீங்க. "வேணும்னா இன்னும் 1000 ரூபா சேர்த்து கொடு, நானே வரேன்'னு  சாந்தி சொன்னது. இதுல முரளி  "உன் மூஞ்சுக்கு இதுவே போதும்'னு சொல்ல... "வெறும் 1000 ரூபாய்க்கு உன் அம்மாக்கிட்ட போகவேண்டியதுதானே'னு சாந்தி சொல்லவும்... முரளி கோபமாகி சாந்தியை தள்ளிவிட்டான்'' எனும்போதே..

முரளி தொடர்ந்தான். "" "டேய் மாப்ள அவ வாய பொத்துடா'னு சொன்னேன். விஜய், சாந்தி வாய பொத்த நான் உள்ள சமையல் கட்டுல இருந்த கத்திய எடுத்துட்டு வந்து அவ கழுத்தை அறுத்தேன். அப்போ விஜய் கட்ட விரல்ல காயமாச்சு. என் கையை சாந்தி கடிச்சா. அதெல்லாம் பொறுத்துக் கிட்டு அவளைக் கொன்னோம். அதுக்கப் புறம் எங்க கை ட்ரெஸ்ல இருக்குற ரத்தத் தை அங்கேயே கழுவிகிட்டு, அங்க இருந்த ரத்தக் கறை, எங்க கைரேகை உள்ள தடயம்  எல்லாத்தையும் அழித்தோம்'' என்றனர்.

""சாந்தி லிஸ்ட்ல பார்த்தா, லோக்கல் முக்கிய அரசியல் புள்ளிகளிலிருந்து அரசு அதிகாரிகள் வரை பலரின் நம்பர்கள் இருந் தன. வளமான அரசியல் புள்ளி சமீபத்தில் பேசிய ரிகார்டும் அதுல கிடைச்சிருக்கு. அஞ்சுநாளா பள்ளப்பட்டி காவல் நிலையமே தினம் 25-30 பேர்களைக் கூப்பிட்டு என்கொயரி செய்யப்பட்டு நிரம்பி வழிந் தது. இந்த அரசியல் புள்ளிகள் பெயர் வந்து விடக் கூடாது என அவர்களை பற்றி கசிய விடவில்லை. நல்லா தண்ணி அடிச்சுருக்கா னுங்க. போதை தலைக்கேறவும் உணர்ச்சி வசப்பட்டு இப்படி பண்ணிட்டானுங்க. சாந்தி அழகுன்னு எல்லோரும் சொன்ன தால பெரிய சினிமா  ஸ்டார் ஆகணும்னு ஆசைப்பட்டு பின்னால் முடியாமல்     இந்த தொழிலுக்கு வந்துட்டாள். ஆக... சாந்தியின் வாழ்க்கையும், இந்தப் பசங்க வாழ்க்கையும் கேள்விக்குறியாக இந்த சினிமாவும் ஒரு காரண மாகிவிட்டது''  -"உச்' கொட்டினர் சில நல்ல காக்கிகள்.

-சே.த.இளங்கோவன்

ad

ad