புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2013


முள்ளியவளை விவகாரம்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
முல்லை. முள்ளியவளை பகுதியில் தமிழ் மக்களுடைய நிலங்களையும் அபகரித்து முஸ்லிம் குடியேற்றத்தை ஏற்படுத்த அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் எடுக்கப்பட்ட
முயற்சிகள் மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் முடங்கியிருக்கும் நிலையில், இன்று புத்தளத்திலிருந்து ஏற்றி வரப்பட்ட முஸ்லிம்களைக் கொண்டு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. 
மிக நீண்டகாலம் மேற்குறித்த பகுதியில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அந்தப் பகுதியில் 1400 ஏக்கர் நிலப்பகுதியில் முஸ்லிம் மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு எதிராக குரல் கொடுத்த மக்கள் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினமும் குறித்த பகுதியில் காடுகளை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன்  கடும் பிரயத்தனம் எடுத்திருந்தார்.
இந்நிலையில் அதற்கும் மக்கள் கடுமையான எதிர்பபினை தெரிவித்து காடழிக்க வந்த புல்டோசர்களையும் திருப்பியனுப்பினர்.
இதனால் அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ள நிலையில். இன்று காலை புத்தளத்திலிருந்து பேருந்துகளில் ஏற்றிவரப்பட்ட 300ற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களைக் கொண்டு மாவட்டச் செயலகத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிரான பதாகைகளையும் ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏந்தியிருந்துள்ளனர்.
இது முற்று முழுதாக தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிரந்தர பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் றிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை வெளிப்பட்டிருக்கின்றது.
இதேபோல் அமைச்சர்களினதும், அரச எடுபிடிகளினதும் ஏவலாளிகளாக அரச அதிகாரிகள் மாறியிருப்பதும் புலனாகியுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கையளிக்கும் மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் முஸ்லிம்கள் ஒப்படைத்தனர்.

ad

ad