புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம்.

அதில், ”இலங்கைத் தமிழர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மார்க்ஸ், லெனின் வழியில் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடநத வார ( 14) இதழில் கழுகார் பதில்கள் பகுதியில் ‘ஈழத்தமிழர் விவகாரத்தில் மற்ற கட்சிகளிடம்
இருந்து மார்க்சிஸ்ட் கம்யூ​னிஸ்ட் கட்சி முரண்படுவது ஏன்?’ என்ற கேள்வி- பதில் இடம்பெற்று இருந்தது. இதற்கு பதிலளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி நமக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தேர்தல்​களில் தொகுதி உடன்பாடு என்பது, தேர்தல் உத்தி சம்பந்தப்பட்ட விஷயம். எந்தக் கட்சியுடன் உடன்​பாடு செய்து கொள்கிறோமோ, அந்தக் கட்சித் தலைவரின் வழி நடப்பதாகப் பொருள் கொள்வது அரசியல் தெரியாதவர்களின் நிலையாக இருக்கலாம். அரசியல் புரிந்த ஒரு பத்திரிகையின் கருத்தாக வருவது ஆச்சரியமளிக்கிறது.
இலங்கையின் இன்றைய சூழலில், அங்குள்ள தமிழர்​களுக்குத் தேவைப்படுவது, சமவாய்ப்பும் அந்தஸ்தும் உள்ள குடிமக்களாக அவர்கள் நடத்தப்படுவதே ஆகும்.
அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக அதிகாரப் பரவல் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மறுகுடியமர்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாகப் பூர்த்தியாக வேண்டும்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.
உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த கடுமையான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதற்கு, நம்பகத்தன்மையுடன் கூடிய சுயேச்சையான உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு முன்வர வேண்டும்.
இதற்கான சர்வதேச நிர்ப்பந்தத்தை இலங்கைக்கு உருவாக்க வேண்டும்.
இந்தியா தனது அரசியல், ராஜீய உறவைப் பயன்படுத்தியும், சர்வதேச மன்றங்களில் இதை எழுப்பியும் கடுமையான நிர்ப்பந்தத்தை செலுத்த வேண்டும்.
இந்தப் பிரச்சினையின் இறுதித் தீர்வு தனி ஈழம் என்பது தமிழகத்தில் செயல்படும் ஒரு சில கட்சிகளின், அமைப்புகளின் கருத்து. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இன்றுள்ள உலகச் சூழலில் பிரிந்து போவது பொருத்தமான தீர்வாகாது என்று கருதுகிறது.
எனினும், அடிப்படையில் எது தீர்வு என்பதை அங்குள்ள யதார்த்தச் சூழலும், அங்குள்ள மக்களின் விருப்பமும் அதற்கான அவர்களின் போராட்டமும்தான் நிர்ணயிக்கும். நமது விருப்பு வெறுப்புகள் அதைத் தீர்மானிக்க முடியாது.
இலங்கை அரசு, இன ஒடுக்குமுறையை மட்டுமல்ல, வர்க்க ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்திருக்கிறது. சமீபத்தில் அங்கு கண்டெடுக்கப்பட்ட குவியலான எலும்புக் கூடுகள் (Mass Grave), 1988-89-ல் அரசை எதிர்த்துப் போராடியபோது படுகொலை செய்யப்பட்ட ஜே.வி.பி.-யைச் சேர்ந்த சிங்கள இளைஞர்களில் ஒரு பகுதியினரின் எலும்புகள் என்று தகவல் வருகிறது.
இப்போது நடக்கும் மாணவர் போராட்டத்தையும் ராஜபக்ச அரசு ஒடுக்கி வருகிறது. மக்களின் அதிருப்தியைத் திசை திருப்ப… இன, மத வெறியைத் தூண்டிவிட்டது.
எனவே, இத்தகைய சூழலில் இரு பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுசேர்ந்து இந்த அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே பொருத்தமான அணுகுமுறையாக அமையும்.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் அணுகுமுறை இந்த வாய்ப்பை முற்றாக அடைத்துவிட்டது. அதேபோல், இலங்கையில் உள்ள முஸ்லிம் தமிழர்கள் கடந்த காலத்தில் புலிகளால் புறக்கணிக்கப்பட்டனர்.
முஸ்லிம் தமிழர்கள் 80 ஆயிரம் பேர் அவர்களின் வாழ்விடத்தில் இருந்து புலிகளால் துரத்தியடிக்கப்பட்டனர். இப்போதாவது, கடந்த காலத்தைத் தள்ளிவைத்து, ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனைத்துச் சிங்கள மக்களையும் தமிழ் இன எதிர்ப்பாளர்கள் என இங்கிருந்து முத்திரை குத்துவது இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. அது உண்மையும் அல்ல.
இப்படிச் சொல்பவர்களை உடனே, ராஜபக்ச ஆதரவாளர்கள் எனப் பகடி பேசுவது, அங்கு பிரச்னை தீர்ந்துவிடாமல் இருந்தால்தான் இங்கு அரசியல் நடத்த முடியும் என்று நினைப்பவர்களின் குறுகிய பார்வை.
குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அதாவது ஏகாதிபத்திய இங்கிலாந்தின் நுகத்தடியில் இருந்து அயர்லாந்து பிரிந்துபோவது குறித்து மார்க்ஸ் சொன்னதையும், சோஷலிச தேசக் கட்டமைப்பில் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றுசேர்க்கும் சந்தர்ப்பத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் சொன்னதையும் அப்படியே நகல் எடுத்து எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழல்களுக்கும் பொருத்த முடியாது.
மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல. குறிப்பான நிலைமைகளில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கப்படும் அறிவியல் பார்வை. இன்றுள்ள ஏகாதிபத்தியம் கோலோச்சும் உலகச் சூழலில், அது வளரும் நாடுகளைத் துண்டாடச் செய்யும் முயற்சிகளையும், தந்திரங்களையும் கணக்கில் எடுத்ததாக நிலைபாடு அமைய வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்.

ad

ad