புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013


ராமதாசை எந்த சிறைக்கு கொண்டு செல்வது? :
காவல்துறை திணறல்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ்.  காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டார்.  இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.  
இதையடுத்து  ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அவரை எந்த சிறைக்கு கொன்டு செல்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.  வட தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்காணோர் கைதாகி யுள்ளனர்.  இதனால் வடதமிழகத்தில் பதட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ராமதாசை எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் எந்த சிறைக்கு கொண்டு செல்வது என்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.

ad

ad