புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2013




           ""ஹலோ தலைவரே... இலங்கை சங்கதிகளோடு லைனில் வந்திருக்கேன்.'' 

""ராஜபக்சேவுக்கு இந்தியஅரசு ஆதரவா இருக்கிறதாலதான், போர்க்குற்றங்களிலிருந்தும் இனப்படுகொலையிலிருந்தும் அவர் தப்பிச்சிக்கிட்டிருக்காருன்னு தமிழர்கள் குமுறிக் கிட்டிருக்காங் களே.''…
nakeeran

"ராஜபக்சேவை இந்தியா நம்ப லைங்கிறதும், அவரோட ஆட்சியைக் கலைக்க இந்திய அரசு ரகசிய வேலைகளைப்  பார்த்துக்கிட்டிருக்குங்கிறதும்தான் லேட்டஸ்ட் தகவல். விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளராகவும் தமிழர்  ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்தவருமான ஆனந்தசங்கரி போன வாரம் சென்னைக்கு வந்தப்ப, இங்கிருக்கிறவங்ககிட்டே பேசுனப்பதான் இந்த செய்திகளை சொல்லியிருக்கிறார்.''

""புதுசாகவும் ஆச்சரியமாகவும் இருக்குதே… ஆனந்த சங்கரி வேற என்னென்ன சொன்னாராம்?''

""இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அவருடைய  தம்பிகளான கோத்தபாய, பசில் இருவரையும் மீறி யாரும் எதுவும் செய்துவிடமுடியாது. சர்வமும் ராஜபக்சே குடும்பமயம்தான். இதைப் பொறுக்க முடியாத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுமார் 25 எம்.பி.க்கள், ராஜபக்சே வகையறாவுக்கு எதிராக அணிதிரள, அவர்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்ருக்கிறார்.'' 

""ரணில்கூட சமீபத்தில் டெல்லிக்கு வந்துட்டுப் போனாரே?''

""எல்லாத்துக்கும் லிங்க் இருக்குதாம். ராஜபக்சே முழுக்க முழுக்க சீனா கட்டுப்பாட்டுக்குள்ளே போறது  இந்தியாவுக்குப் பிடிக்கல. அதனால "ரா' மூலமா ராஜபக்சேவைக் கவிழ்க்க, டெல்லியில் கூர்சீவப்பட்ட ரணில், லண்டனில் உள்ள மாலினி, கொழும் பில் சந்திரிகான்னு மும்முனை ஆப ரேஷனை மேற்கொண்டது. இது கிட்டத்தட்ட சக்ஸஸ் நிலைக்கு வந்தப்ப, சீன உளவுத்துறை இதை ஸ்மெல் பண்ணி ராஜபக்சேவுக்கு போட்டுக்கொடுத்திடிச்சாம்.''

""அப்புறம்?''

""முன்னாள் அதிபர் சந்திரிகா வுக்கு பாதுகாப்பு கொடுத்த இலங்கை ராணுவத்தினர் மூலமே அவரை வெள்ளைவேனில் கடத்திட்டாரு கோத்தபாய. இரண்டு நாள் சந்திரிகா வைக் காணாமல் சந்திரிகாவோட உறவினர்கள் பதறிப்போய் ராஜபக்சே கிட்டே முறையிட, அவர் பி.எஸ். வீரப்பா பாணியில் சிரிச்சிக்கிட்டே, சந்திரிகாவின் ரகசிய வேலைகளை புட்டு புட்டு வச்சிருக்காரு. அப்புறம், கோத்தபாயவுக்கு மகிந்த ராஜபக்சே போன்போட, அந்த போனிலேயே சந்திரிகாவோட உறவினர்களுக்கு எச்சரிக்கை விட்ட கோத்தபாய, ஒழுங்கா சந்திரிகாவை நாட்டை விட்டு ஓடச்சொல்லுங்க. இல்லைன்னா, கதையை முடிச்சிட்டு புலிகள் மேலே பழியைப் போட்டுடுவோம்னு சொல்ல, இப்ப சந்திரிகா இலங்கையில் இல்லை.'' 

""இதற்குப் பின்னணியில் இருந்த இந்தியா மேலேயும் ராஜபக்சே அரசு செம கடுப்பா இருக்குமே?''

""அந்தக் கடுப்பில்தான் இந்தியாவுக்கு எதிரா கோத்தபாயகிட்டேயிருந்து அறிக்கை வந்தது. சந்திரிகா, ரணில், ரா மூன்றுமேலேயும் ராஜபக்சே செம காட்டமா இருக்கிறதால, அவர் கட்சியில் உள்ள அதிருப்தி எம்.பிக்கள் மரணபீதியில் இருக்காங்க. எப்படியாவது கட்சியை உடைத்து, ராஜபக்சேவின் கையைப் பலவீனப்படுத்தினால்தான்  தங்கள் உயிரைக் காப்பாற்றிக்க முடியும்ங்கிற நிலையிலே இருக்காங்க. இந்திய அரசும் அமெரிக்காவும் சேர்ந்து ராஜபக்சேவுக்கு விரைவில் முடிவு கட்டுவாங்கன்னு சென்னைக்கு வந்த ஆனந்த சங்கரி விவரமா சொல்லியிருக்காரு.'' 

""இந்திய அரசு என்ன செய்யப் போகுதுங்கிற எதிர்பார்ப்பும் இருக்குமே?''

""அதைவிட, ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்றுபேரோட மரண தண்டனை விஷயத்தில் இந்திய அரசு என்ன  செய்யப்போகுதுங்கிற பதட்டமான எதிர் பார்ப்புதான் தமிழர்கள் மனதில் இருக்குது. ம.தி. மு.க.வோட உயர்நிலை செயல்திட்டக்குழுவில் பேசிய வைகோ, ஜெ.வின் கையில்தான் இந்த மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்தாக்கும் பரிந்துரைகளை அளிக்கும் அதிகாரம் இருக்குது. அவருக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் நம்ம பிரச்சாரம் இருக்கணும்னு வைகோ சொல்லியிருக்காரு.''

""ஜெ.வுக்கு நிர்பந்தம் கொடுத்தால், அ.தி.மு.க.வுடனான கூட்டணி?''

""கூட்டணி சம்பந்தமா இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டியதில்லைன்னும் கட்சி நிர்வாகிகள்கிட்டே சொல்லியிருக்கும் வைகோ, தேர்தலுக்கான நிதி வசூல் பற்றித்தான் கட்சிக்காரர்கள்கிட்டே அதிகம் கவலைப்பட் டாராம். அதே நேரத்தில் தி.மு.க.வில் தேர்தல் வேலைகள் ஸ்பீடாயிடிச்சி. 40 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் தி.மு.க.வுக்கு சாதகமா இருக் கும்னு கலைஞரும் ஸ்டாலினும் ஆலோசித்த தோட வேட்பாளர் தேர்வையும் கிட்டதட்ட நடத்திட்டாங்களாம்.'' 

""ஓ''…

""சிட்டிங் எம்.பிக்களில் மக்களிடம் ஒட்டாமல் இருக்கிறவங்க, கட்சிக்காரங்களோடு இணக்கமா இல்லாதவங்க இவங்களுக்கெல்லாம் சீட் கிடையாதுன்னு முடிவெடுக்கப்பட்டிருக்காம். சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் போனப்ப தொகுதி எம்.பி.யான ரித்தீஷ் சார்பில் எந்த வரவேற்பு விளம் பரமும் இல்லை. எப்படியும் எனக்கு சீட் கொடுக்கிற தில்லைன்னு முடிவெடுத்துட் டாங்க.. ரகுமான்கானுக்குத் தான் சீட்டு. எதுக்கு விளம் பரம் பண்ணனும்னு தன் வசமுள்ள ஆட்கள்கிட்டே ரித்தீஷ் சொன்னாராம்.'' 

""முன்னாள் மத்திய மந்திரிகளுக்கு சீட் உண்டா?''

""அதுபற்றியும் ஆலோ சனை நடந்திருக்கு. தஞ்சாவூர்  தொகுதிக்கு சிட்டிங் பழனி மாணிக்கமும், டி.ஆர்.பாலுவும் கடுமையா மோதுறாங்க. பழனிமாணிக்கம் மேலே தலைமையே அதிருப்தியா இருக்குதாம். ஏன்னா அழகிரி மனைவி-மகன் சம்பந்தப்பட்ட கணக்குகளையெல்லாம் தன்வசமிருந்த வருமானவரித் துறை மூலமா தோண்டிய தாகவும், அதுபோல தி.மு.க. எம்.பி.க்களுக்கும் நெருக்கடி கொடுத்ததாகவும் அதே நேரத்தில் சசிகலா வழக்குகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் பழனிமாணிக்கம் மேலே  புகார்கள் வந்திருக்கு தாம். டி.ஆர்.பாலுவுக்கு தஞ்சாவூரை ஒதுக்குவது சம்பந்தமாகவும் தி.மு.க. தலைமை உறுதியான முடிவு எடுக்கலையாம்.''

""ராமஜெயம், பொட்டு சுரேஷ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்கிறதைவிட, ஜாமீன் ரத்தான தே.மு.தி.கவின் திருத்தணி எம்.எல்.ஏ அருள்சுப்ரமணியனுக்கு வலைவீசி கைது செய்திருக்கே  தமிழக போலீஸ்?''

""இருளர்கள் பயன் படுத்தும் நகராட்சிப் பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பினார்ங்கிறதுதான் அருள்சுப்ரமணியன் மேலே சொல்லப்பட்ட புகார். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போடணும்னு சொல்லி அந்த வழக்கில் ஜாமீன் வாங்கினார் அருள்சுப்ரமணியன். ஆனா, ஜனாதிபதி தேர்தலையே தே.மு.தி.க புறக்கணிச்சிட்டதால பொய்க் காரணம் சொல்லி ஜாமீன் வாங்கியதா முறையீடு செய்யப்பட்டு, ஜாமீன் ரத்தாயிடிச்சி. இதற்கிடையில் அந்த சுவரை எம்.எல்.ஏ. தரப்பு இடித்து வழி உருவாக்கிக்கொடுத்திடிச்சி. இதைக் கோர்ட்டில் சொல்லி மறுபடியும் ஜாமீன் வாங்கலாம்னு நினைச் சிக்கிட்டிருந்தப்ப, 3 எஸ்.பிக்கள் தலைமையிலான போலீஸ் படைகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு எம்.எல்.ஏ.வைத் தேடி, கடைசியில் கர்நாடகாவில்  அவரைக் கைது செய்திடிச்சி. கூடுதலா, இருளர்களைப் பார்த்து, நீங்களெல்லாம் எலிபிடிக்கும் பசங்கன்னு அருள் சுப்ரமணியம் திட்டியதா அவர் மேலே வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின்கீழ் புது வழக்கும் போடப்பட்டிருக்கு.''

""தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களை அ.தி. மு.க. பக்கம் இழுப்பதுதானே ஆளுந்தரப் பின் பாணி. இவர் மேலேமட்டும் இத்தனை வழக்குப் பாயுதே?''

""இங்கே வந்திடு. வழக்கு வாப சாயிடும்னு ஆளுந்தரப்பிலிருந்து அழைப்பு கள் வருதாம். நான் வரமாட்டேன். சுப்ரீம் கோர்ட் வரை போவேன்னு அருள்சுப்ர மணி இதுவரைக்கும் உறுதியா இருக்காராம். இப்படி எல்லா எம்.எல். ஏ.க்களுக்கும் அ.தி.மு.க. தூண்டில்போடுவதால் தன் கட்சி எம்.எல்.ஏ.க் களை பாதுகாக்கும் வேலையில் விஜயகாந்த் மறுபடியும் பிஸியாயிட் டாரு. யார் மீதெல்லாம் அவருக்கு சந்தேகம் இருக்குதோ அவங்களை கேப்டன் டி.வி.யில் அ.தி.மு.க.வின் இழுப்பு வேலைகளுக்கு எதிரா பேசச் சொல்றாராம். லேட்டஸ்டா பேசியவர், சூலூர் எம்.எல்.ஏ. தினகரன்.''

""கோட்டை வட்டாரத்தின் லேட்டஸ்ட் பேச்சு பற்றி நான் சொல்றேன்.. .. போலாம் ரைட்டுன்னு சொல்லும் டிபார்ட்மெண்ட்டில் 3 மண்டல மேனே ஜர் பதவி காலியா இருக்குது. இதற்கான பேரம் சி கணக்கில் எகிறிக்கிட்டிருக்காம். இன்னும் எகிறட்டும்னு நிரப்பாமலேயே வைத்திருக்கிறாராம் மாண்புமிகு.'' 

 கச்சத்தீவு! டெசோ முடிவு!


டெசோவின் அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து கலைஞர் தலைமையில் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், "இலங்கை கடற்படை யினரால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தடுக்கப்பட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமா?' என்று கலைஞர் கேட்க, "தற்போதுள்ள சூழலில் இதுபோன்ற சட்ட நடவடிக்கை அவசியமானது' என்று கி.வீரமணி, திருமா, சுப.வீ. உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆமோதித்தனர். மேலும், இதற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல டெசோ சார்பில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்கிற ஆலோசனையை முன்வைத்த னர். இதனை கலைஞர் ஏற்றுக் கொள்ள, அந்தப் பொதுக்கூட் டத்தை எங்கு, எப்பொழுது நடத்தலாம் என விவாதித்ததில் சென்னை திருவான்மியூரில் வரும் 24-ந்தேதி நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல லாமா? என்று உறுப்பினர்கள் கேட்க, "தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் நடக்கவிருப்பதால் உடனடியாக கூட்ட ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் இருக்கும் என கலைஞர் விவரிக்க, அந்த யோசனை தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காரைக்கால் மீனவர்கள் 26 பேரை உடனடியாக மீட்க, மத்திய அரசை வலியுறுத்துவது என ஆலோசித்தனர்.

இந்த விவாதங்களின் அடிப்படையில் கச்சத்தீவை ரத்து செய்ய வழக்கு, மீனவர்களை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது, இதற்காக பொதுக்கூட்டம் நடத்துவது என்கிற தீர்மானங்களை நிறைவேற்றினார் கலைஞர்.

ad

ad