புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2013


நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டால் அதை ஏற்க நான் தயார்: ராஜ்நாத்சிங்
 
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயார் என்று பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 
பாரதீய ஜனதா தனிப்பட்ட பெரிய கட்சியாக உள்ளது. சமீபத்தில் பாரதீய ஜனதாவில் மாற்றி அமைக்கப்பட்ட நிர்வாக குழுவை ஐக்கிய ஜனதா தளம் கட்சி வரவேற்றுள்ளது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எங்கள் கூட்டணியில் தான் நீடிக்கிறார். 
பாரதீய ஜனதா கட்சியில் யார் பிரதமர் வேட்பாளர்? யாரை முன்னிலைப்படுத்துவது என்பதை கட்சியின் பாராளுமன்ற குழுவில் விவாதித்து முடிவு எடுப்போம். நரேந்திர மோடியை மூத்த முதல்-மந்திரி என்ற வகையில் பாராளுமன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரியை நியமிப்பதற்கான ஒரு இடத்துக்கு நரேந்திர மோடியை நியமித்தோம். அவர் பிரபலமானவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடம் இல்லை. நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்ய வில்லை. இது தொடர்பாக நரேந்திர மோடியிடம் நான் விவாதித்தது இல்லை. ஒருவேளை நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டால் அதை ஏற்க நான் தயார். 
யஸ்வந்த்சின்கா, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் ஆட்சி மன்ற குழுவில் இடம் பெறாதது ஏன் என்று கேட்கிறார்கள். அவர்கள் இருவரும் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad