புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2013


சீமான் மீது மின்னஞ்சல் ஊடாகத் தாக்குதல் தொடுப்பவர் யார்?

தனி நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடும் மிக மோசமான நிகழ்வுகள் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. ஊடகத் துறையில் ,தேசியவிடுதலைப் போராட்டம் குறித்து சமரசமின்றி எழுதுவோரை நோக்கியே இத் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. எனது முகவரியைத் திருடிய ஒரு நபர், அதில் சீமானைப் பற்றி பல புனைவுகளை மிக மோசமான தமிழில் எழுதியுள்ளார். இந்த முகவரித் திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட நபருக்கு இரண்டுவிதமான நோக்கங்கள் இருந்திருக்க வேண்டும் .
ஒன்று, சீமான் மீது தமிழக மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் செல்வாக்கினை சிதைக்க வேண்டும் என்பதோடு தமிழக மாணவர் போராட்டத்தை வேறுவழியில் திசைதிருப்ப வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது. அடுத்தது, இந்த அவதூறு மின்னஞ்சலை, மக்களால் நன்கு அறியப்பட்டவர் பெயரில் அனுப்பினால் எல்லோரும் அதனை நிற்சயம் பார்ப்பார்கள் என்கிற உள்நோக்கம் இருந்திருக்க வேண்டும்.
ஆனாலும் இந்த முகவரித் திருடன் யார் என்பதை அறிய வேண்டுமாயின், அந்த மின்னஞ்சலின் HEADER ஐ ஆய்வு செய்தால் , இதை அனுப்பியவரின் ரிஷி மூலம் தெரிந்து விடும். கணனி தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இதில் பாதிப்படைந்தவன் என்கிற வகையில்,இத் திருடன் யார் என்பதை நான் தெரிந்து வைத்துள்ளேன். இது குறித்து E – CRIME துறையினரோடு தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் யார் என்பதை , வழக்காடும்போது தெரிந்து கொள்வீர்கள் எனவும் ஊடகர் இதயச்சந்திரன் தெரிவித்தள்ளார். மீண்டும் ….உங்கள் மத்தியில் உலவவிடப்பட்ட அந்த மின்னஞ்சலுக்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ad

ad