புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2013



எங்கெங்கு திரும்பினாலும் மாணவர் போராட்டம். நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்யும் கூட்டம் என்று விமர்சிக்கப்பட்ட எம் இளைஞர் கூட்டம் இன்று நீதிக் கேட்டு வீதிக்கு வந்திருப்பதை பார்க்கையில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இதே எழுச்சி 2009-ல் வந்திருந்தால் வரலாறு திரும்பியிருக்குமே என்ற ஏக்கமும் வருகிறது.
முத்துகுமார் ஆசைப்பட்டதும் இதுபோன்ற ஒர் எழுச்சியை தான். மாணவர் எழுச்சியை ஒடுக்க கருணாவைப் போல் ஜெயாவும் தந்திரமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுப்பார்த்தும் ஒண்ணும் நடக்கவில்லை. காலம் கடந்தேனும் இந்த எழுச்சி ஏற்பட்டது கொண்டாடப்பட வேண்டியது. 

ஒரு பாலசந்திரனைக் கொன்று இன்று தமிழகம் முழுக்க .. உலகம் முழுக்க பல பாலசந்திரன்களை உருவாக்கி விட்டிருக்கிறார்கள் கொன்ற ராஜபக்சேவும் துணை நின்ற சோனியாவும்.

அதுவும் வழக்கமான போராட்டம் என்றால் சட்டக்கல்லூரி மாணவர்களும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மட்டுமே வீதிக்கு வந்த நிலை மாறி இன்று தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டக்களத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது பாலசந்திரனின் ஒற்றைப்பார்வை எத்தனை வீரியமிக்கது என்று புரிகிறது.

இன்று வீதிக்கு வந்திருக்கும் மாணவர்கள் அத்தனைபேரும் கடந்த நான்காண்டுகளாக ஈழப்படுகொலைக் காட்சிகளை மனதிற்குள் போட்டு புழுங்கித் தவித்திருக்கிறார்கள் என்பதையே இந்த எழுச்சிக்காட்டுகிறது.

ஏதோ ஒருவகையில் இப்படியான ஒரு எழுச்சிக்கு வித்திட்ட லயோலா கல்லூரி மாணவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

மாணவர்கள் எழுச்சி ஒன்று படுத்தப்பட வேண்டும்.. வென்றாக வேண்டும் நாம்..

-கார்ட்டூனிஸ்ட்.பாலா
19-3-13

ad

ad