புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2013

கொமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: சுவிஸ் அதிகாரிகளுக்கு சம்மன்
டெல்லியில் இடம்பெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான ஊழல் வழக்கில், சுவிட்சர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில கொமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன. இதற்கான ஏற்பாடு மற்றும் கட்டமைப்பு பணிகளில் ஊழல் நடைபெற்றதாக முறைப்பாடுகள் எழுந்தது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகின்றது.
போட்டி ஏற்பாடு குழு தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் கல்மாடி எம்.பி. கைது செய்யப்பட்டு. பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கொமன்வெல்த் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் விளம்பர பலகை, ஸ்கோர் போர்டு ஆகியவற்றை அமைத்ததில், 95 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கான கருவிகளை வினியோகம் செய்த, சுவிட்சர்லாந்தை சேர்ந்த "சுவிஸ் டைமிங் லிமிடெட்' என்ற நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மூவருக்கும், சம்மன் அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ளும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மூன்று அதிகாரிகளுக்கும் சம்மன் தயார் செய்து, அதை உள்துறை அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. அனுப்பி வைத்துள்ளது.

ad

ad