புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013


தயா மாஸ்டர் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதை கேட்டாலே மக்கள் சிரிக்கின்றனர்: ஐ.தே.க.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இதை நாம் கேட்டாலே மக்கள் சிரிக்கின்றனர். இவ்வாறு ஐதேக வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 
வடக்கில் மக்கள் ஒரு கருத்தை கூட வெளியிட முடியாமல் இராணுவத்தினருக்கு அஞ்சி வாழ்கின்றனர். இந்நிலையில் வடக்கில் மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் மக்களுக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இதை நாம் கேட்டாலே மக்கள் சிரிக்கின்றனர்.
இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்கம் எவ்வாறு தேர்தலில் போட்டியிட போகின்றது என்று தெரியவில்லை.
இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் வன்னிப் பகுதிகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயமானது யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் வன்னியில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலை, மீள்குடியேற்றங்கள் முதலானவை பற்றி அறிந்து கொள்ளல் மற்றும் செம்படம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைதேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என பிரதான இரு காரணங்களை கொண்டு அமைந்திருந்தது.
அந்த வகையில் நாம் மேற்கொண்டிருந்த இந்த விஜயம் எமக்கு வெற்றியளித்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வன்னி ஆகிய பகுதிகளுக்கு கட்சித் தலைவர் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் விஜயத்தை மேற்கொண்டிருந்தோம்.
யுத்தம் முடிந்து பல வருடங்கள் முடிவடைந்தும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலை மாறவில்லை என்பதை அவதானிக்க முடிந்ததோடு இப்பிரதேச மக்கள் சில கோரிக்கைகளையும் முன்வைத்ததோடு கவலையும் தெரிவித்தனர்.
இராணுவ தேவைகளுக்காகவும் அபிவிருத்தி தேவைகளுக்காகவும் வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. மக்களின் பாரம்பரியமான காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெறவில்லை. மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள சில பிரதேசங்களில் ஒரு வருடம் முடிவடைவதற்குள்ளேயே கொட்டில்கள் உடைந்து காணப்படுகின்றன.
மந்த கதியிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கை மற்றும் பிரதேச அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றை நேரில் பார்க்கும் போதே எமக்கு அறிந்துகொள்ள கூடியதாக இருந்தது.
வன்னிப்பகுதியில் வாழும் மக்கள் ஒரு கருத்தைக் கூட வெளியிட முடியாது அச்ச நிலையிலேயே வாழ்கின்றனர். அவ்வாறு அராசாங்கத்துக்கு எதிராகவோ அல்லது சாதரணமாகவோ ஒருவர் கருத்தை தெரிவித்தால் உடனடியாக இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுகின்றனர். அல்லது குறித்த நபரின் தகவல்களை திரட்டிகொள்வதோடு வாகனங்களின் இலக்கங்களையும் பதிவு செய்து கொள்கின்றனர்.
இதனால் சுதந்திரமில்லாத அச்ச நிலையிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு மற்றும் வன்னியில் உள்ள அனைத்து மக்களும் இதனையே கூறுகின்றனர்.
செம்படம்பர் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் மக்களுக்கு சிறிதளவும் விசுவாசம் கிடையாது. ஒரு சுதந்திரமான முறை இல்லாது எவ்வாறு சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இதை கேட்டால் மக்கள் சிரிக்கின்றனர். இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்கம் எவ்வாறு தேர்தலில் போட்டியிட போகின்றது என்று தெரியவில்லை.
எனவே வடக்குத் தேர்தலுக்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதோடு வடக்குத் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்க வேண்டும்.
மேலும் சுயாதீன பொலிஸ் சேவையை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வடகில் நீதியான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்பதோடு அரசாங்கம் கொள்ளையடித்து தேர்தலில் வெற்றி பெறும் நிலை ஏற்படும் என்றார்.

ad

ad