புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013




           தற்கேற்ப, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான செயல் திட்டங்களை பா.ம.க.வினருக்கு வகுத்துக் கொடுத்து அந்தப் பயணத்தை விரைவுபடுத்தி வருகிறார். சமீபத்தில் இது குறித்துப் பேசிய ராமதாசு, ""வரும் நாடாளுமன்றத் nakeeranதேர்தலில் பா.ம.க. 31 இடங்களில் போட்டியிடும். 13 இடங்களில் பா.ம.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது'' என்றார். இந்தச் சூழலில், பா.ம.க.வின் வாக்கு வலிமை பற்றி ஒரு அரசியல் ஆய்வுகளை மேற்கொண்டோம்.

1989 சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த பா.ம.க., அதே  வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தல்வரை அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டது. 1989 தொடங்கி 1996 வரை தனித்து தேர்தலை எதிர்கொண்ட ராமதாஸ், அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற -சட்ட மன்ற தேர்தல்கள் அனைத்திலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளில் ஏதேனும் ஒன்றோடு கூட்டணி உறவை ஏற்படுத் திக்கொண்டே தேர்தலை எதிர்கொண் டார். ஆனால், 2011 தேர்தலில் பா.ம.க.வுக்கு கிடைத்த அதீத தோல்வியால், "திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. இனி எல்லா தேர்தல்களிலும் பா.ம.க. தனித்தே போட்டியிடும்' என்கிற பழைய கொள்கை முழக்கத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் ராமதாஸ்.

மீண்டும் தனித்துப் போட்டி என்கிற முடிவு அரசியல் ரீதியாக பா.ம.க.வுக்கு வெற்றியைத் தருமா? பா.ம.க.வின் வாக்கு வலிமை எப்படி இருந்துள்ளது? எப்படிப் பட்டதாக இருக்கிறது?

வன்னியர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறு.அண்ணல்கண்டர், ’"இந்தியாவில் பெரும்பான்மை சமூகங்களில் இரண்டே இரண்டு  சாதி மட்டும்தான் ஒரே இடத் தில் அடர்த்தியாக வாழ்கிறார்கள். ஒன்று வட தமிழகத்திலுள்ள வன்னியர்கள். மற்றொன்று மகாராஷ்டிராவில் உள்ள பவார் என்கிற பட்டப் பெயர் கொண்ட சாதியினர். குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஒரு சாதியினர் அடர்த்தியாக இருக்கும் நிலையில் அவர்களுக்கான ஒரு தனித்த அரசியல் கட்சி உருவாகுமானால் அந்த கட்சிக்கு அந்த சாதியின் ஆதரவு இயல்பாக திரும்பும் என்பதுதான் அரசியல் கணக்கு. அந்த அடர்த்தியான சாதியாக 120 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வட தமிழகத்தில் வன்னியர்கள் இருப்பது பா.ம.க.வுக்கு வலிமை சேர்க்கிறது. வன்னியர்களில் 20 சதவீதம் பேர்தான் அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். 70 சதவீதம் பேர் அரசியலில் இல்லை. ஆனால் அரசியல் பேசுபவர்களாக இருக்கிறார்கள். மீதியுள்ள 10 சதவீதம் பேர் அரசிய லிலும் இருப்பதில்லை. அரசியல் பேசுபவர்களாகவும் இருப்பதில்லை. அதை வைத்து நாங்கள் ஒரு கள ஆய்வை மேற்கொண்டபோது அந்த 70 சதவீதம் பேர் பா.ம.க. தனித்துப் போட்டியிடுகிறபோது ஆதரிக் கிறார்கள். அதுவே கூட்டணியாக நிற்கும்போது சிதறுகிறார்கள். அதனால் பா.ம.க. தனித்து போட்டியிடுகிறபோது வன்னியர்களின் வாக்குகள் சாலிடாக பா.ம.க.வுக்கு கிடைக்கும் நிலையே இருக்கிறது''’ என்கிறார்.

ஆனால், இதனை மறுக்கின்ற அரசியல் ஆய்வாளரான வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி,’’1989 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 5.82 சதவீத வாக்குகளும், 1991 சட்டமன்ற தேர்தலில் 5.94 சதவீத வாக்குகளும் அதே வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5.14 சதவீத வாக்குகளும் பெற்ற பா.ம.க., 1996 சட்டமன்ற தேர்தலில் 3.84 சதவீத வாக்குகளையும் அதே வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2.03 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் இனி வாக்குகள் சரியும் என்பதை உணர்ந்ததினால்தான் 1998-நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறவை ஏற்படுத்திக்கொண்டு கூட்டணி என்கிற கணக்கைத் துவக்கினார் ராமதாஸ். அதனால் கூட்டணி உறவு திராவிட கட்சிகளுக்கும் தேவைப்பட்டது. பா.ம.க.வுக்கும் தேவைப்பட்டது''’ என்கிறார்.

ஆனால் ""எந்தச் சூழலிலும் பா.ம.க.வின் வாக்கு வலிமை சரிந்து விடவில்லை'' என்று அழுத்தமாக சொல்லும் பா.ம.க.வின் மாநில துணைப் பொதுச்செய லாளர் ஏ.கே.மூர்த்தி,’""1991 முதல் 2011 வரையிலான சட்டமன்ற தேர்தலை மட்டும் எடுத்துக்கொள்வோம். 1991 தேர்தலில்  தனித்து களமிறங்கிய பா.ம.க., 198 இடங்களில் போட்டியிட்டு 14 லட்சத்து 52 ஆயிரத்து 982 வாக்குகளைப் பெற்றது. 1996 தேர்தலில் 13 லட்சத்து 70 ஆயிரம், 2001 தேர்தலில் (அ.தி.மு.க. கூட்டணி) 15 லட்சத்து 57 ஆயிரம், 2006 தேர்தலில் (தி.மு.க. கூட்டணி) 18 லட்சத்து 64 ஆயிரம், 2011 தேர்தலில் (தி.மு.க. கூட்டணி) 19 லட்சத்து 28 ஆயிரம் என வாக்குகளை பெற்றிருக்கிறோம். இந்த வாக்குகளைக் கவனித்தால் ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க.விற்கான வாக்குகள் அதிகரித்தப்படியேதான் இருக்கிறது. அதனால் பா.ம.க.விற்கான வாக்குகள் சரிந்துவிட்டன என்பது உண்மை அல்ல''’என்கிறார்.

அதே சமயம், அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியோ,’1991-ல் 198 இடங்களில் போட்டியிட்டு 14 லட்சம் வாக்குகளையும், 1996-ல் 116 இடங்களில் போட்டியிட்டு 13 லட்சம் வாக்குகளையும் பெற்ற பா.ம.க., 2001 அ.தி.மு.க. கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்டு 15 லட்சம் வாக்குகளையும், 2006 தி.மு.க. கூட்டணியில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 லட்சம் வாக்குகளையும், 2011 தி.மு.க. கூட்டணியில் 30 இடங்களில் போட்டியிட்டு 19 லட்சம் வாக்குகளையும் பெற்றிருக்கிறது. இதை வைத்து ஆய்வு செய்யும்போது கூட்டணியில் இருக்கும் போது மட்டுமே பா.ம.க.வால் கூடுதல் வாக்குகளை பெற முடிந் திருக்கிறது என்பதே நிதர்சனம். பா.ம.க.வுக்கு தனித்த செல்வாக்கு இருப்பது உண்மை எனில், 1991-ல் தனித்து போட்டியிட்டு 5.94 சதவீத வாக்குகளை எடுத்த பா.ம.க., 1996-லும் தனித்துப் போட்டியிட்ட போது 1 சதவீதமாவது வாக்குகள் அதிகரித்திருக்க வேண்டும். மாறாக 2 சதவீதம் குறைந்து 3.84 சதவீத மாக அதன் வாக்கு வலிமை குன்றி யது. அதுவே கூட்டணி என்கிற போது பா.ம.க.வின் ஐந்தரை சதவீத வாக்குகள் அப்படியே மெயின் டெயின் ஆகியிருப்பதை கவனிக்க முடியும். அதனால் கூட்டணி இல்லாவிட்டால் பா.ம.க.வின் வாக்கு வலிமை குறைந்துதான் போயிருக்குமே தவிர அதி கரித்திருக்கும் என்பதற்கு உத்தர வாதமில்லை''’என்று சுட்டிக் காட்டுகிறார்.


ஆனால், ""இதெல்லாம் அதிகரித்துவரும் பா.ம.க.வின் செல்வாக்கை மறைக்கும் மாயத் தோற்றமே தவிர உண்மை இல்லை. காரணம், திராவிட கட்சிகளோடு கூட்டணி வைக்கிற போது பா.ம.க. வின் வாக்குகள் திராவிட கட்சி களுக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால், திராவிட கட்சிகளின் வாக்குகள் பா.ம.க.வுக்கு கிடைப்ப தில்லை. அதனால் தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டணியில் நின்றாலும் பா.ம.க.விற்கு கிடைத்துள்ள வாக்குகள் அதன் தனிப்பட்ட செல்வாக்கிற்கு கிடைத்தவையே. அதை திராவிட கட்சிகள் சொந்தம் கொண்டாட முடியாது. திராவிட கட்சிகளோடு கூட்டணி வைக்கிறபோது அந்தக் கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி பா.ம.க.விற்கு தோல்வியைத் தருகிறது. ஆனால் எந்த சூழலிலும் பா.ம.க.வால் திராவிடக் கட்சிகள் தோல்வியைச் சந்திக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த காலங்களில் கூட்டணி என்கிற நிலைப்பாட்டை பா.ம.க. எடுக்காமல் இருந்திருந்தால் இன்றைய சூழலில் 15 சதவீத வாக்குகளை பா.ம.க.தன்னகத்தே கொண்டிருக்கும்.இதனை வருகிற நாடாளுமன்ற தேர்தல் உணர்த்தும்''’’என்கிறார் பா.ம.க.வின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கவிஞர் ஜெயபாஸ்கரன்.


"கூட்டணியில் இருக்கும்போது மட்டுமே பா.ம.க.வின் வாக்குகள் அதிகரித்துள்ளன. பா.ம.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது' என்று சொல்கிற வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி, ""தனித்துப் போட்டியிட்டதன் மூலம் 1 எம்.பி.கூட ஜெயிக்காத ராமதாஸ், கூட்டணி வைத்தபோதுதான் 4 (1998), 5 (1999), 6 (2004) என எம்.பி.க்களைப் பெற முடிந்தது. அதேபோல தனித்து போட்டியிட்டு அதிகபட்சம் 4 எம்.எல்.ஏ.க்களை பெற்ற பாம.க., கூட்டணி வைத்தபோதுதான் 20 எம்.எல்.ஏ.க்கள் (2001), 18 எம்.எல்.ஏ.க்கள் (2006) என பெற்றிட முடிந்தது. மொத்தத்தில் கூட்டணியில் 5 முறை லாபம் அடைந்த பா.ம.க., 2 முறை (2009 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 6-ல் போட்டியிட்டு 6-லும் தோல்வி  மற்றும் 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 30 இடங்களில் போட்டியிட்டு 3-ல் மட்டுமே வெற்றி) நட்டத்தை சந்தித்திருக்கிறது. இதற்கு காரணம், சுய லாபங்களுக்காக மாறி மாறி ராமதாஸ் கூட்டணி வைத்தார் என்பதுதான். அந்த இமேஜை உடைப்பதற்காகவே இப்போதைக்கு தனித்துப் போட்டி என்கிற அஸ்திரத்தை எடுத்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும் வாக்குகளை வைத்து 2016 சட்ட மன்ற தேர்தலில் வியூகம் அமைப்பதுதான் ராமதாஸின் தற்போதைய இலக்கு''’என்று விவரிக்கிறார் ரவீந்திரன் துரைசாமி.


ஆனால் ஏ.கே.மூர்த்தியோ ""பா.ம.க. இருக்கும் கூட் டணியே வெற்றி பெற்றி ருக்கிறது. காரணம் பா.ம.க.வின் செல்வாக்கு தான். பா.ம.க.வில் 65 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வட மாவட்டங்களில் ஒவ் வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 2 லட்சம் வாக்குகள் இருக்கிறது. இதில் 60-லிருந்து 70 ஆயிரம் வாக்குகள் பா.ம.க. வினுடையது. தேர்தலில் 60 அல்லது 65 சதவீதம் வாக்குகள் பதிவாகும்போது 40-லிருந்து 45 ஆயிரம் வாக்குகள் வாங்கி னால் எளிதாக வெற்றி பெற்றிட முடியும். அந்த வலிமை பா.ம.க.வுக்கு மட்டுமே இருக்கிறது. அதனால் வருகிற நாடாளு மன்ற தேர்தலில் 13 இடங்களில் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இதற் கான வியூகங்களை வகுத்து அந்த செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். பா.ம.க.வின் தனித்த செல்வாக்கை நாடாளுமன்ற தேர்தல் நிரூபிக்கும். அப்போது வட தமிழகத்தில் திராவிட கட்சிகள் காணாமல் போகும்'' என்கிறார் மிக அழுத்தமாக.

பா.ம.க.வின் வலிமை மற்றும் பா.ம.க. எடுத்துள்ள அரசியல் முடிவுகள் குறித்து வன்னியர் சமூகத்தின் ஆய்வாளரும் "அச்சமில்லை' பத்திரிகையின் ஆசிரியருமான இறைவனிடம் விவாதித்த போது... ""பா.ம.க. தனித்து நிற்பதில் லாபம் இல்லை. தனித்து நிற்பதினால் வன்னியர்களின் நம்பிக்கை யைப் பெறலாம். வாக்கு சதவீதமும் அதி கரிக்கும். ஆனால், வெற்றி கிடைக்காது. வாக்கு சதவீதம் அதிகரிப்பதினால் சமூகத்திற்கு என்ன பலன்? ஒன்றுமில்லை. அதுவே, 4 எம்.பி.வெற்றி பெறும்போது சமூகத்தின் வலிமை தெரியும். அதற்குக் கூட்டணிதான் உதவுமே தவிர, தனித்து அல்ல'' என்கிறார். 

ஆனால் அசாத்திய நம்பிக்கையில்  இருக்கிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். 

ad

ad