புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2013


வடமாகாண சபை தேர்தலில் டக்ளஸ் தனித்துப் போட்டி; தயா மாஸ்டரை வேட்பாளராக நிறுத்துகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி பெரும்பாலும் தனித்துப் போட்டியிடக் கூடும் என்று கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈபிடிபி இணைந்து செயற்படும் நிலையில், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக நம்பப்படுகிறது. பெரும்பாலும் ஈபிடிபி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே வாய்ப்புகள் உள்ளன. இதையடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

.

ad

ad