புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2013




           மிழக காங்கிரஸில், "வாசன் தனிக்கட்சி தொடங்கப் போகிறார். மீண்டும் த.மா.கா. உதயமாகிறது' என்கிற தக வல்கள்தான் றெக்கைக் கட்டிப் பறக்கின்றன. வாசனை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவரது உள் வட்டாரங்களில் விசாரித்தபோது,’’""காங்கிரஸின் துணைத் தலைவராக ராகுல்காந்தி வந்ததையடுத்து வாசனின் முக்கியத்துவம் டெல்லியில் குறைந்துபோனது. குறிப்பாக, இளைஞர் காங்கிரஸ் தலைவரான வாசனின் ஆதரவாளர் யுவராஜாவை ராகுல் நீக்கினார். நீக்குவதற்கு முன்பு யுவராஜாவிற்காக வாசன் செய்த சிபாரிசு கள் ஏற்கப்படவில்லை. இது தொடர்பாக சோனியாவிடம் முறையிட வாசன் முயற்சித்த போதும் சந்திக்க முடியவில்லை. ஒருமுறை நாடாளுமன்ற வளாகத்தில் யுவராஜா பிரச்சினை குறித்து ராகுலிடம் வாசன் பேச, "அது முடிந்து போன விஷயம். பேசறதுக்கு என்ன இருக்கு?' என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார். இது வாசனை அவமானப்படுத்துவது போல இருந்தது. அடுத்த வருடம் ஏப்ரலில் முடியும் ராஜ்யசபா பதவி மீண்டும் கிடைக்காத சூழல்.

இந்நிலையில்தான் வாசன் குடும்பத்தினர்  அவரிடம் தீவிரமாக டிஸ்கஷன் செய்கின்றனர். அந்த விவாதங்களில், "டெல்லியில் உங்களுக்கான மரியாதை கொடுக்கப்படவில்லை. ராகுலைப் பொறுத்தவரை, தமிழகத்தை 4-வது நிலையில்தான் வைத்திருக்கிறார். அதாவது, காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும் மாநிலங்களைத்தான் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் வைத்து, அவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது என்கிற அஜெண்டா ராகுலுடையது. உங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தமிழகத்தின் எதிர்கால அரசியலில் நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாக இப்போதே விதை போடுவதுதான் சரியாக இருக்கும். காங்கிரஸை உடைத்துவிட்டு வரும் ஒரு வலிமையான சக்தியை சேர்த்துக்கொள்ள அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு கட்சிகளுமே விருப்பம் கொள்ளும். அப்போது காங்கிரஸில் இருந்தால் நாம் என்ன எதிர்பார்ப்போமோ, அதை பிரதான கட்சியுடன் கூட்டணி வைப்பது மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாமே' என்று அழுத்தமாக வலியுறுத்தியுள்ளனர். அதனை ஆமோதித்துக் கொண்டும் இருக்கிறார் வாசன்''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

வாசனின் ஆதரவாளர்களோ, ""வாசனிடம் நாங்கள் பேசும்போது மேலிடத்தின் மீது அவருக்கு அதிருப்தி இருப்பதை அறிய முடிகிறது. இன்றைய சூழலில் காங்கிரசை கூட்டணியில் வைத்துக்கொள்ள எந்த கட்சியும் விரும்ப வில்லை. வருகிற தேர்தலில் காங்கிரசுக்கு கிடைக்கிற வாக்கு கள் ரொம்ப குறைவாகத்தான் இருக்கும். அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் ஏதேனும் ஒன்றோடு கூட்டணி உருவானால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கிற வாக்குகளை வைத்துத்தான் காங்கிரசுக்கு சீட்டுகள் கிடைக்கும். அந்த சீட்டுகளை பங்கிட்டுக் கொள்ள கட்சியிலுள்ள எல்லா கோஷ்டிகளும் மோதிக் கொள்ளும். நாமும் மல்லுக்கட்ட வேண்டியதிருக்கும். அதனால் காலநேர சூழலை கணக்கிட்டு திடமான ஒரு முடிவை எடுத்திடலாம் என்பதே வாசனின் எண்ணமாக இருக்கிறது''’என்று விவரிக்கிறார்கள்.

மீண்டும் த.மா.கா. என்கிற கருத்து குறித்து, காங்கிரஸ் தலைவர் களில் ஒருவரும் வாசனின் ஆதர வாளருமான வேலூர் ஞானசேகர னிடம் பேசியபோது,’""காங்கிரசும் அ.தி.மு.க.வும் 1991-1996-ல் கூட்டணி வைத்திருந்தது. 1996 காலக்கட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான உணர்வுகள் தமிழகத்தில் எதிரொ லித்த நேரம். அந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் "அ.தி.மு.க. வுடன் கூட்டணி வேண்டாம்' என நரசிம்மராவிடம் அழுத்தமாக சொன் னார் மூப்பனார். அது ஏற்றுக்கொள் ளப்படாததால் பிறந்ததுதான் தமிழ் மாநில காங்கிரஸ். இப்போது, இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடங்கி காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை என பல விவகாரங்களில் தமிழகத்தின் உணர்வுகளை மத்திய அரசும் காங்கிரஸும் கண்டுகொள்ள வில்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் தேர்தல் நேரங்களில் மக்களை காங்கிரஸ்காரர்கள் சந்திக்க முடியுமா என்கிற சந்தேகமும் வருவதால், காங்கிரஸ் தொண்டர் கள் அனைவரும் விரக்தியில் இருக்கிறார்கள். அதனால் தமிழகத்தின் உணர்வுகள் டெல்லி யால் மதிக்கப்படாத நிலையில் த.மா.கா. மீண் டும் உதயம் என்கிற கருத்து பரவுகிறது. மற்றபடி த.மா.கா. வருமா? வராதா? என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை''’என்கிறார்.

காங்கிரஸின் மற்றொரு தலைவர்களில் ஒருவரும் வாசனின் தீவிர ஆதரவாளருமான பீட்டர் அல்போன்ஸிடம் இது குறித்து கேட்டபோது,’""தமிழகத்தில் காங்கிரஸை பலகீனப்படுத்த ஒரு முயற்சி நடப்பதுபோல காங்கிரஸ் தலைவர்களை பலகீனப்படுத்தவும் ஒரு முயற்சி நடக்கிறது. அதன் விளைவுதான் த.மா.கா. உருவாக்கம் என்பது. த.மா.கா. இல்லை என்று வாசனே  அழுத்தமாக சொல்லி விட்டார். அப்படியிருக்க அந்த கருத்து முற்றுப் பெற்றுவிட்டது''’’ என்றவரிடம், ""தமிழக உணர்வுகளை பிரதமரிடம் வலியுறுத்தியும் காங்கிரஸ் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டு அதிலிருந்து வெளியேறு வதற்கு வசதியாகத்தான் பிரதமரை  வாசன் சந்தித்தார் என்கிறார்களே'' என்ற போது, ""தமிழகத்தின் உணர்வுகளை தமிழகத்திலுள்ள அமைச்சர்கள் யாரும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தாத போது, தனக்கு அந்தக் கடமை இருப்பதாகக் கருதி பிரதமரை சந்தித்து வலியுறுத்தி யிருக்கிறார் வாசன். மற்றபடி வேறு எந்த உள்அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை'' என்கிறார்.

ஆனால், தனது தந்தை மூப்பனாரின் நெருங்கிய நண்பரான தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அடிக்கடி சந்தித்து வருகிறார் வாசன். மூப்பனாரும் பிரணாப்பும் தங்களது அரசியல் வளர்ச்சிக்கு பரஸ்பரம் உதவிக்கொண்டவர்கள். அப்படிப்பட்ட நட்பு அவர்களுடையது. இந்த நிலையில், பிரணாப்பை அடிக்கடி சந்திக்கும் வாசன், அகில இந்திய காங்கிரஸ் தலைமையால், தனக்கான அங்கீகாரம் மறுக்கப்படுவது பற்றி சொல்லி வருகிறார். அதனடிப்படையில் வாசனின் அரசியல் வளர்ச்சிக்கான அட்வைஸை செய்து வருகிறார் பிரணாப் முகர்ஜி. தமிழகத் தைச் சேர்ந்த ப.சிதம்பரமும் பிரணாப்பும் அரசியல் எதிரிகள். சிதம்பரத்தின் வளர்ச்சியை தமிழகத்தில் தடுக்கவே, தனது நண்பரின் மகனான வாசனை வார்த்தெடுக்க நினைக்கிறார் பிரணாப். ஸோ... வாசனின் தனிக்கட்சி சிந்தனைக்கான உரம் பிரணாப் முகர்ஜிதான் என்கிறது டெல்லி.

இப்படி வாசனைச் சுற்றி தகவல்கள் பரவிக்கிடக்கும் நிலையில், இது அத்தனையும் 10, ஜன்பத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்  வெளிநாட்டிலிருக்கும் சோனியா காந்தி அடுத்த வாரம் டெல்லி வருகிறார். அப் போது சோனியாவை சந்திக்குமாறு வாசனிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ""இந்த சந்திப்புக்குப் பிறகுதான் த.மா.கா. மீண்டும் உருவாகும்ங்கிற கருத்து விரிவடையுமா? சுருங்குமா? என்பது தெரிந்துவிடும்'' என்கிறார்கள் கதர்ச் சட்டையினர்.

-இரா.இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின் & அசோக்

ad

ad