புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2013


இந்தோனேசியாவில் இருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவருக்கு வலைவீச்சு!- சிங்கள ஊடகம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது,
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர
னின் பின்னர் இரகசியமான முறையில் புலிகளுக்கு தலைமை வகித்து வருபவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து குறித்த நபரை கைது செய்ய முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் குறித்த நபர் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
குமரன் பத்மநாதனின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவராக குறித்த நபர் கருதப்படுகின்றார்.
சீலன் என்ற பெயருடைய குறித்த நபர் பத்து கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் புலனாய்வு நடவடிக்கைள் போன்றவற்றுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
பிரபாகரனின் மறைவின் பின்னர் நெடியவன் புலிகளுக்கு தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இரகசியமான கட்டளைகளை அனைத்தும் இந்த சீலன் என்பவரே பிறப்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad