புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


காகித ஓடம் பாடலுக்கு இசை அமைத்த நாட்கள் நினைவுக்கு வருகிறது: ராமமூர்த்தி மறைவுக்கு கலைஞர் இரங்கல்
இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். 


அதில் கூறி இருப்பதாவது:- 
மெல்லிசை மன்னர்கள், இரட்டையர்கள் என்று தமிழ்த் திரைப்பட உலகில் நீண்ட பல ஆண்டுக்காலமாக முத்திரை பதித்தவர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி மறைந்து விட்ட செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். 
60 ஆண்டுக் கால நட்பு எனக்கும் அவருக்கும் உண்டு. ‘மறக்க முடியுமா’ திரைப்படத்திற்கு நான் எழுதிய ‘காகித ஓடம்’ என்று தொடங்கும் பாடலுக்கு அவர் இசை அமைத்த நாட்கள் எல்லாம் என் நினைவுக்கு வருகிறது. 
திரைப்பட உலகில் பல இரட்டையர்கள் உண்டு. இசையமைப்பாளர்களில் தமிழில் ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாகப் புகழ்க்கொடி நாட்டிய அந்த இரட்டையர்களில் ஒருவர் மறைந்து விட்டது தமிழ்த் திரைப்பட உலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், எம்.எஸ்.விசுவநாதனுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ad

ad