புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2013

ஐ.பி.எல். கிரிக்கெட்: 2 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்சிடம் தோல்வி
ஐ.பி.எல். தொடரின் 2-வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்,
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. 

முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆரம்பத்தில், மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க வீரர் தில்ஷான் 8 பந்துகளை எதிர்கொண்டும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் பந்தில் அவர் கிளீன் போல்டானார். 

அவரைத் தொடர்ந்து கெயிலுடன், விராட் கோலி இணைய ஆட்டம் சூடுபிடித்தது. 14 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்கள் விளாசிய கோலி, எல்.பி.டபுள்யூ. முறையில் அவுட்டாகி வெளியேறினர். ஆனால், மறுமுனையில் ஆடிய வீரர்கள் சோபிக்கவில்லை. 

இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடிய கெயில் 92 ரன்களுடனும், அருண் கார்த்திக் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய சச்சின், பாண்டிங் நிதானமாக ஆடினர். இந்நிலையில் சச்சின் 23 ரன்னிலும், பாண்டிங் 28 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

பின்னர் களமிறங்கிய ஷர்மா, 11 ரன்னில் வினய் குமாரின் பந்தில் கிளீன் போல்டானார். பின்னர் தினேஷ் கார்த்திக், ராய்டுவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அப்போது தினேஷ் கார்த்திக் கிரிஸ்டனின் பந்து வீச்சில் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து அசத்தினார். 37 பந்துகளின் 60 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், வினய் குமாரின் பந்து வீச்சில் அகர்வாலிடம் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். 

இறுதியில் 2 பந்தில் 8 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சொற்ப இலக்குடன் பொல்லார்ட்டும், ஹர்பஜனும் களத்தில் நின்றனர். கடைசி 2 பந்துகளில் பொல்லார்ட் ஒரு பவுண்டரியும், ஒரு ரன்னும் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவினர். 

இதனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் அதிக பட்சமாக 92 ரன்கள் எடுத்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கிரிஸ் கெயில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ad

ad