புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2013


“பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் உளவுத்துறை FBI செட்டப்” போட்டு உடைக்கிறார் தாயார்!

பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து சிறு வயதில் கஸகஸ்தான் நாட்டுக்கு குடிபெயர்ந்து, பின்னர்
அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள். இருவரும் சகோதரர்கள்.பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவருடைய தாயார் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். “எனது மகன்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டது உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் செட்டப். அவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக உளவுத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள்” என்கிறார் இவர்.
இருவரில் மூத்தவர் போலீஸ் சூற்றிவளைப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றையவர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும்தான் குண்டு வைத்தவர்கள் என்பதை ஏறக்குறைய உறுதியாக சொல்கிறது எஃப்.பி.ஐ.
இந்த நிலையில், மகன்களைப் பற்றி சில விஷயங்களை வெளியிட்டுள்ளார், அவர்களது தாயார். “எல்லாமே உளவுத்துறையின் செட்டப்” என்று கூறும் அவர், விலாவாரியாக என்ன சொல்கிறார்?
“எனது மகன்கள் பற்றி உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு நன்றாகவே தெரியும். காரணம், அவர்கள் இருவரும் உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் கன்ட்ரோலிலேயே கடந்த சில ஆண்டுகளாக இருந்தார்கள். எமது வீட்டுக்கு உளவுத்துறை எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்வார்கள்.
எனது மகன்களுடன் பேசுவார்கள். என்னுடன் பேசுவார்கள். உளவுத்துறை அவர்களை ஒரு கருவியாக உபயோகித்துக் கொண்டிருந்தது. இன்டர்நெட்டில் குறிப்பிட்ட இணையதளங்களுக்கு சென்று நோட்டம் விடுமாறு அவர்களுக்கு (மகன்களுக்கு) சொல்லிக் கொடுத்ததே உளவுத்துறை எஃப்.பி.ஐ.தான்.
அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்கு போவார்கள் என்பது உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு நன்றாகவே தெரியும். இப்போது ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல நாடகம் ஆடுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக எனது மூத்த மகனை எ.ப்.பி.ஐ. அதிகாரிகள் மிக நன்றாகவே அறிவார்கள்” என்கிறார் அவர்.

ad

ad