புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2013

திருநங்கைகளுக்கான அழகி போட்டிPhotos

    திருவண்ணாமலை மாவட்டம்,   திருவண்ணாமலை – சேத்பட்  செல்லும் வழியில் உள்ளது வேடந்தவாடி கிராமம். இக்கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா 22ந்தேதி தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்துக்கொண்டனர். 

கடந்த 8 ஆண்டுகளாக இந்த கிராமத்தல் இத்திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  திருநங்கைகளுக்கான அழகி போட்டிகள் நடைபெற்றன. இதில் அவர்கள் கலந்துக்கொண்டு விதவிதமான ஆடை, அலங்காரத்தில் மேடைக்கு வந்து திறமைகளை காட்டினர்.  அப்போது மேடைக்கு கீழ் அமர்ந்து இதனை கண்ட மக்கள் கைதட்டி ஊக்குவிக்க அவர்கள் மகிழ்ச்சியாயினர். 
போட்டியின் முடிவில் திருச்சியை சேர்ந்த கீதா முதல் பரிசை பெற்றார். இரண்டாவது பரிசு திருவண்ணாமலையை சேர்ந்த ரம்யா, மூன்றாம் பரிசை திருச்சியை சேர்ந்த பழனியம்மாள் பெற்றனர். இவர்களான பரிசுகளை திருவண்ணாமலை கோட்டாச்சியர் காசி வழங்கினார். 
மூன்றாம் நாளான 24.3.13 புதன்கிழமை தாலி கட்டும் விழா நடைபெற்றது. மாலை தாலி அறுக்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை அந்த கிராம மக்கள் வெகு சிறப்பாக செய்துயிருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. 
-ராஜா.

ad

ad