புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினவினோம்.

கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை
தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினாவினோம்."யாழ். கைதடி பகுதியில் உள்ள இரட்சண்யசேனை இல்லத்திலில் இருந்து காணாமல் போன சிறுவர்களில் கைது செய்யப்பட்ட சிறுமிகள் ஏழு பேரை நேற்று இரவு (09.05 அளவில்) யாழ்ப்பாணப் பொலிஸார் வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் இன்றைய தினம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிறுவர் நீதிமன்ற நீதவான் குறித்த சிறுமியர்களை திருநெல்வேலி - கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்" எனக் கூறினார்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிறுமியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என வினவியபோது, "அவ்விடயம் நீதிமன்றத்துடன் தொடர்புபட்டது. அதன் காரணத்தால் தற்போது அது தொடர்பாக எதுவும் கூற முடியாதுள்ளது. இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியர் ஏழு பேரும் 10 தொடக்கம் 20 வயதிற்கு உட்பட்டவர்கள்" என அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "இணையத்தளங்கள் சிலவற்றில் நான் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை. நான் இப்பொழுதுதான் முதன் முதலாக இவ்விடயம் தொடர்பாக வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவித்துள்ளேன்" எனக் கூறினார்.

உமாச்சந்திர பிராகாஷ்

ad

ad