புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


மதுரை மாநகராட்சிப் பகுதியில் 100 மலிவு விலை உணவகங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
இதில் முதல் கட்டமாக 10 உணவகங்கள் திறக்க, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்து மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா பேசியது:
மதுரை மாநகரில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் திறந்தவெளி உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்கின்றனர். மாநகரப் பகுதிக்கு தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி வேலை செய்பவர்களாகவும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களாகவும் உள்ளனர். இந்த மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, இவர்களின் பசியைப் போக்கும் வகையில் மதுரை மாநகராட்சியில் "அம்மா' திட்டத்தின் கீழ் 100 மலிவு விலை உணவகங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 10 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும். இந்த உணவகங்களைச் செயல்படுத்த, மாநகராட்சியிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி பகுதியில் சாலையோரங்கள், உள்புறச் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் சிற்றுண்டி உணவகங்கள் நடத்துவோர், அவர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
ஒவ்வோர் உணவகத்திலும் 300 பேருக்கு இட்லி, சாம்பார், தயிர் சாதம், சாம்பார் சாதம் தயாரித்து விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
இதன் மூலம் கிடைக்கும் வருவாயை விட, பற்றாக்குறை ஏற்படும் தொகையை மாநகராட்சி பொது நிதியிலிருந்து செலவு செய்து கொள்ளவும், அரசு மானியம் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. உணவகங்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து எவ்விதத் தகவலும் வெளியிடப்படவில்லை.

ad

ad