புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2013

குருவுக்கு ஜூன் 12 வரை காவல் நீட்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் அருகே பணங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் 2012 ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த பா.ம.க. கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவரும் பா.ம.க சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு அவதூராக பேசியதாக, தாழம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்த காடுவெட்டி குருவை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் ஏப்ரல் 30-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுதவிர கடந்த 2012, 2013-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க பெருவிழாவில் குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூராக பேசியது உள்பட 3 வழக்குகளில் குருவை மாமல்லபுரம் போலீஸார் கைது செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில், கடந்த மே 10-ம் தேதி தேசிய தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சென்னை புழல் சிறையில் குரு அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் காடுவெட்டி குருவை போலீஸார் கடந்த மே 17-ம் தேதி மீண்டும் திருக்கழுக்குன்றம் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது குருவிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள் மே 29-ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி 29.05.2013 காடுவெட்டி குருவை போலீஸார் திருக்கழுக்குன்றம் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் காடுவெட்டி குருவுக்கு வரும் ஜூன் 12-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டனர் இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

ad

ad