புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. 
உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டும். 2011ஆம் ஆண்டோடு நாலரை லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பு காலாவதியாகிவிட்டது. அப்போதே அது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், மத்திய அரசு இதில் அக்கறை காட்டவில்லை.
தற்போதுள்ள விலைவாசியைக் கணக்கில்கொண்டு இந்த வருமான வரம்பை ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. 
இப்போது அந்த வருமான உச்ச வரம்பு 6 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது எவ்விதத்திலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உதவியாக அமையாது.  இந்த வருமான உச்ச வரம்பின் காரணமாக உயர்கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தும் ஏராளமான இடங்கள் நிரப்பப்பட முடியாமல் காலியாக உள்ளன.  எனவே, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வருமான உச்ச வரம்பை ஆண்டுக்கு

12 இலட்சம் என உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம். பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும்கூட இதைத்தான் பரிந்துரைத்திருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். 
சமூகநீதிப் போராட்டத்தில் எப்போதும் முன்னணி வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சனையிலும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தங்களைத் தந்து வருமான உச்ச வரம்பை உயர்த்துவதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கி

ad

ad