புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013

சட்டவிரோத காணி சுவீகரிப்பிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல்

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தமது ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.
தம்முடைய தனிப்பட்ட சொந்தக் காணிகள் சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக இவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மேலும் 2,000 பேர் இதே போன்ற மனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையின் தலைமையகத்தை அமைப்பதற்கென 6,381 ஏக்கர் 38.97 பேர்சஸ் பரப்பளவுள்ள இடத்தை கைப்பற்றவுள்ளதாக காணி சுவீகரித்தல் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பு மற்றும் பலாலி, காங்கேசன்துறை அதி உயர் பாதுகாப்பு வலையத்தை நிர்மாணிப்பதற்காக அப்பிரதேசத்தை கையளிப்பது பற்றிய அறிவித்தல் ஆகியவற்றிற்கு எதிராகவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
25.8 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள இப்பிரதேசமானது, 37.21 சதுர கிலோ மீற்றர் உள்ள கொழும்பு நகரத்தைப் போன்று 3/2 பரப்பளவு கொண்டதாகும்.
மனுவை தாக்கல் செய்துள்ள அனைவருக்கும் மேற்படி பிரதேசத்தில் குறிப்பிடும் அளவு பரப்பளவுள்ள காணிகள் இருக்கின்றன. இவர்கள் மோதல் சமயத்தில் இப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் ஆவதுடன், யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து தம்முடைய சொந்தக் காணிகளுக்கு வர முயற்சித்தபோது இராணுவம் இவர்களை தடுத்து விட்டுள்ளது.
தற்போது இராணுவம் நிலை கொண்டுள்ள இப்பாரிய பிரதேசத்தை சுற்றி கம்பி வேலி இடப்பட்டுள்ளதோடு இராணுவ வீரர்கள் இப்பிரதேசத்தை சுற்றி காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இப்பிரதேசம் ஒரு அதி பாதுகாப்பு வலயம் என எப்போதும் பிரகடனம் செய்யப்படவில்லை என்பதோடு 2011 ஆம் ஆண்டில் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் தற்போது இப்பிரதேசத்தை அதி பாதுகாப்பு வலையம் என பிரகடனப் படுத்துவதற்கோ அல்லது ஏனயை பொதுத் தேவைக்காக இதை சுவீகரிப்பதற்கான எந்த சட்ட அடிப்படையும் கிடையாது என்பதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், யாழ்ப்பாணத்தில் காணிகளை சுவீகரிக்கும் தகுதி வாய்ந்த அரச அதிகாரி மற்றும் அரச காணி அளவையாளர் ஆகியோரை பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மோகன் பாலேந்திரனின் அறிவுறுத்தல் படி ஜனாதிபதி சட்டதரணி கே. கனக ஈஸ்வரன் மற்றும் சட்டதரணிகளான எம். ஏ. சுமந்திரன், விரான் கொரேயா, லக்ஷ்மன் ஜெயக்குமார், பவானீ பொன்சேகா மற்றும் நிரான் அன்கிடெல் ஆகியோர் மனுவை ஆவணப்படுத்தினர்

ad

ad