புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2013


 மைலம் நிதிநிறுவனம் பல கோடி மோசடி
சென்னை பால வாக்கத்தை சேர்ந்த ஜோதி, அகிலா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று புகார் கொடுக்க வந்தனர்.
திருவொற்றியூரை சேர்ந்த பைலட் பிரேம்குமார், பிரியா ஆகியோர் மீது மோசடி புகார் கொடுத்தனர்.

பின்னர் ஜோதி, அகிலா ஆகியோர் செய்தியாளர்களிடம்,
’’திருவொற்றியூரில் வெல்பர் அசோசியேசன் என்ற பெயரில் பிரியாவும், அவரது கணவர் பைலட் பிரேம்குமாரும் பொது அமைப்பு நடத்தி வருகின்னர். அவர்கள் அரசின் டாம்கோ, தாட்கோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி தருவதாக கமிஷன் கேட்டனர். ரூ. 2லட்சம் கடன் வாங்கி தருவதற்கு ரூ.3,500 கமிஷனும், ரூ.5 லட்சம் வாங்கி தருவதற்கு ரூ.5 ஆயிரம் கமிஷனும் கேட்டனர். 
அதை நம்பி நூற்றுக்கணக்கான பெண்கள் கமிஷன் தொகையை முன்கூட்டியே கொடுத்தனர். ஆனால் கமிஷனை வாங்கிய அவர்கள் எங்களுக்கு கடன் வாங்கி தரவில்லை. எங்களை அலைக்கழித்தார்கள். நாங்கள் பணத்தை கொடுத்து விட்டு அலைந்து திரிகிறோம். எங்கள் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்’’என்று கூறினார்கள். 
கணவன்-மனைவி இருவரும் இதுபோல சுமார் ரூ. 5 கோடி வரை கடன் தருவதாக மோசடி செய்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். 
சென்னை தண்டையார் பேட்டை கார்ப்பரேஷன் காலனியை சேர்ந்த இளம்பூரணி , மைலம் நிதிநிறுவனம் என்ற பெயரில் தண்டையார் பேட்டை மற்றும் புதுச்சேரி, கடலூரில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். அவர் மீது அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் கொடுக்க வந்து இருந்தனர். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை சீட்டு நடத்தியுள்ளார். அவரிடம் சீட்டு போட்டவர்களுக்கு சரியாக பணத்தை கொடுக்க வில்லை. சுமார் ரூ. 5 கோடி வரை பணம் மோசடி செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ad

ad