புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2013

ஜெர்மனியின் பயெர்ன்  மியூனிச் கழகம் நிகழ்த்திய அற்புதம் 

இன்று பர்செலோனாவில் நடைபெற்ற ஐரோப்ப்பிய சம்பியன் லீக் கிண்ணத்துக்கான அரை இறுதி ஆட்டத்தின் மீள் விளையாட்டில் உலகின்
சிறந்த வீரர் விருது பெற்ற மெஷ் சி  பங்களிக்கும் பலம் மிக்க கழகமான பர்செலோனைவை 3-0 என்ற ரீதியில் பயெர்ன் மியூனிச் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு நுழைந்துள்ளது . முதல் விளையாட்டில் 0-4 என்ற ர்ர்தியில் தோற்று போன பர்செலோனா இன்று 5 கோல்கள் அடித்தால் மட்டுமே இறுதி ஆட்டத்துக்குள் நுழையலாம் என்ற இக்கட்டான நிலையில் ஆட வந்தது . முன்பாதியில் சிறப்பாக ஆடிய பர்செலோனா  49 ஆம் நிமிடத்தில் ரோப்பேன் போட்ட கோலினால் இந்த கனவு கலைந்தது . இன்னும் ஆறு கோல்கள் அடிக்க வேண்டிய நிலையில் 72 ஆம் நிமிடத்தில்  ரிபெரி தூக்கி கொடுத்த பந்தை தட்டுக்க பொய் தனது அணிக்கக்க பேக் கோல் போட்டு கெடுத்தார் .இப்போது இன்னும் 7 கோல்கள்  அடிக்கவேண்டிய கட்டம் .மீண்டும்79 ஆம் நிமிடத்தில்  ரிபேறி கொடுத்த பந்தை முல்லர் கோலாக்கினார் . ஆக மீதி உள்ள 10 நிமிடத்தில் பர்செலோனா 8 கோல்கள் போட்டாக வேண்டும் . முடியவில்லை .  பலம் மிக்க சர்செலோனாவை அதன் மைதானதிலேயே வைத்து வெளியேற்றியது பயெர்ன் .இறுதியாட்டத்தில் டோட்முண்டை பயெர்ன் எதிர் கொள்ளும் .இந்த வருடம் இங்கிலாந்து இத்தாலி பிரான்ஸ் கழகங்கள் சோபிக்காத போதும் எப்போதும் பிரகாசிக்கும் ஸ்பெயின் கழகங்களும் வெளியேறின.

ad

ad