புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013

கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா இராயணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பரமணியம் மகன் சண்முகராஜ் (35). இவர் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி.
சண்முகராஜ் மற்றும் அவரது மகள் புவனேஸ்வரி (12), மகன் ரமணா (8), சண்முகராஜின் தங்கை மகள் ரம்யா (10) ஆகிய நால்வரும் ஒரே மோட்டார் பைக்கில் நேற்று திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு, இராயணம்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

கொங்கணாபுரம் அருகே உள்ள வெட்டுகாடு பகுதியில், முன்னால் சென்ற லாரியை முந்திச் சென்றுள்ளார். அப்போது கொங்கணாபுரத்தில் இருந்து சங்ககிரி லாரிபட்டறைக்கு வேலை செய்யச் சென்ற டாரஸ் லாரி, பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த சண்முகராஜ், அவரது மகள் புவனேஸ்வரி அவரது மகன் ரமணா  ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பைக்கில் வந்த இன்னொரு குழந்தையான ரம்யா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக 108 அவசரகால ஆம்புலன்ஸ் வண்டியை உதவிக்கு அழைத்துள்ளனர்.
அந்த வண்டியின் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யா இப்போது, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து நடந்த ஓமலூர்-சங்ககிரி நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இந்த விபத்து குறித்து இடைப்பாடி இன்ஸ்பெக்டர் சுப்பரமணியம் விசாரணை நடத்தி வருகிறார்.

ad

ad