புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2013

4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி
ஐ.பி.எல் போட்டியில் 57வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன் மூலம் முதலில் துடுப்பெடுத்தாடி பெங்களூர் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்தது.
இதில் அதிரடியாக விளையாடிய கோஹ்லி அரைசதம் கடந்து 99 ஓட்டங்களும், டிவில்லியர்ஸ் 32 ஓட்டங்களும், ஹென்ரிக்ஸ் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்து 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இதில் சந்த் 41 ஓட்டங்களும், ரோரர் 32 ஓட்டங்களும், ஜெயவர்த்தனே 19 ஓட்டங்களும், பதான் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
பெங்களூர் அணியில் உனட்கட் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

ad

ad