புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2013

517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
2013-14ஆம் நிதியாண்டிற்கான ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 1701 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த முறை வழங்கப்பட்ட 1142 கோடி ரூபாயை விட இந்தாண்டு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியில் சுமார் 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை.
தமிழகத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில குறைபாடுகள் தொடர்வது, கவலையளிக்கிறது. குறிப்பாக 26 மாவட்டங்களில் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் பணமாக வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அஞ்சலகம் மற்றும் வங்கி கணக்குகள் மூலமாக ஊதியம் வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலைத்தன்மையுடைய பணிகளை மட்டுமே இந்த திட்டத்தின்கீழ் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
மாநில வேலை உறுதியளிப்புக் குழுவின் கூட்டத்தை இந்த ஆண்டாவது கூட்டுமாறு முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ad

ad