புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2013

சுரேஷ் ரெய்னா உள்பட பிரபல வீரர்கள் கண்காணிப்பு: போலீசார் தகவல்
நடந்து முடிந்த 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பார்ட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா,
அங்கித் சவான் உள்ளிட்ட 19 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்கள். கிரிக்கெட் 'ஸ்பார்ட் பிக்சிங்' தொடர்பாக மேலும் சில வீரர்கள் சிக்குவார்கள் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் தரகர்களை அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது கிரிக்கெட் சூதாட்டத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 10 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் இவர்கள் அனைவரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பல்வேறு அணிகளுக்காக விளையாடியவர்கள் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து 10 வீரர்களை உ.பி.போலீசாருடன் டெல்லி, மும்பை போலீசாரும் இணைந்து தீவிரமாக காண்காணிக்கிறார்கள். போலீஸ் கண்காணிப்பில் சுரேஷ் ரெய்னாவும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உ.பி.யைச் சேர்ந்த இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் உ.பி. வீரர்களான புவனேஷ்வர் குமார் (புனே வாரியர்ஸ்), ருத்ரபிரதாப் சிங் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), அலிமுர்தாஸா (புனே வாரியர்ஸ்), பிரவீன்குமார், பியூஷ் சாவ்லா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இம்தியாஸ் அகமது, அங்கித்சிங் ராஜ்புத் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஏகலவ்யா திவேதி (புனே வாரியர்ஸ்) ஆகியோரும் போலீஸ் கண்காணிப்பு பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக உ.பி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருண்குமார் தெரிவித்தார்.

ad

ad