புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2013

கர்நாடக முதல்வராக சித்தராமையா தெரிவு
கர்நாடக முதல்வராக சித்தராமையா தெரிவு செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் கடந்த 5ம் திகதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை உண்மை என நிரூபிக்கும் வகையில், தேர்தல் நடந்த 223 தொகுதிகளில் 121 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பின் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், அந்தக் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தாலும் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது.
அதற்கேற்ற வகையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாக உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வராக சித்தராமையா தெரிவு செய்யப்பட்டார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரான சித்தராமையா, தெற்கு கர்நாடகாவில் உள்ள வரூணா தொகுதியிலிருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தெரிவு செய்யப்பட்டவர்.
ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையாவுக்கு ஆதரவாக 80 வாக்குகளும், கார்கேவுக்கு ஆதரவாக 40 வாக்குகளும் கிடைத்தன.
கர்நாடக முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள சித்தராமையா திங்களன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ad

ad