புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2013

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்ரமணியர் கோவில் ராஜ கோபுரப் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன .படங்கள் கீழே உள்ளன 



யுத்த கால சூழ் நிலையில் பெரும் சேதத்துக்குள்ளான  மேற்படி ஆலயத்தின் மீள் புனருத்தாரண பணிகளை புலம்பெயர் மக்களின் ஆதரவுடன்
கனடாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ள சமூக சேவகர் அருணாசலம் சண்முகநாதன் (கண்ணாடி) நேரடியாக அங்கேயே இருந்து கவனித்து செய்து முடிக்கும் நிலையில் உள்ளது .இந்த ஆலயத்தினை நீண்ட காலமாக அறம்காவலராக இருந்து காத்து வந்த வர்த்தகர் இராமநாதன் ராஜகோபுர பணிகளை தொடக்கி வைத்திருந்த வேளையில் காலமானதை அடுத்து இந்த ராஜகோபுர பணிகளும் தற்போது நிறைவு ற்றுள்ளன ஆலயத்தின் முழுவதுமான கட்டுமான பணிகள் கிட்டதட்ட புதிதாகவே செய்யபட்டு வெகு விரைவில் கும்பாபிசேகம் நிகழ வுள்ளது

இந்த ஆலயத்தின் பகுதியைச் சேர்ந்த சுவிஸ் வாழ் மக்களின் பெரும் நிதிப் பங்களிப்பு இந்த ஆலய பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது .இந்த சுவிஸ் வாழ் மக்கள் முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்ட நிதிசேகரிப்பினை மேற்கொண்டு இருந்தனர் இருந்தாலும் சில இடங்களுக்கு மக்களை இன்னும் நாடி செல்ல முடியாத நிலை இருப்பதால் இன்னமும் தங்கள் பங்களிப்பை செய்ய விரும்புவோர் குழந்தை எனப்படும் அருணாசலம் கைலசநாதனுடன் தொடர்பு கொள்ளவும்





















ad

ad