புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2013



    பாமக இளைஞர் அணி செயலாளர் இரா.அருள் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
சேலம் மாநகர மாவட்ட செயலாளர் கதிர் ராஜரத்தனம். பா
மக இளைஞர் அணி செயலாளர் இரா. அருள் ஆகிய இருவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டத்தை கண்டித்து சேலம் நால்ரோடு பகுதியில் சாலை மறிய-ல் இவர்கள் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக கூறி பள்ளப்பட்டு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார், கதிர் ராஜரத்தினம், இரா.அருள் உட்பட 41 பேர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தார். இதுவரை அவர்களுக்கு அந்த வழக்கில் பிணை கிடைக்கவில்லை.
 

இதற்கிடையில் 09.05.2013 மாலை 6 மணி அளவில் சேலம் மத்திய சிறைக்கு சென்ற காவல் ஆய்வாளர் செந்தில்குமார் கதிர் ராஜரத்தினம் மற்றும் இரா.அருள் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 
இதுகுறித்து சேலம் மாநர காவல் ஆணையர் மகாலி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இன்னும் சில நிமிடங்களில் பதில் கூறுவதாக கூறி காலம் கடத்தினர்.

இதேபோல் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் அகோரம், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் மூர்த்தி ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்த இவர்களை திருச்சி சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.

தர்மபுரி மாவட்டத்தில் தரை பாலத்தை, வெடிகுண்டு வைத்து சேதப்படுத்திய வழக்கில் பாமகவைச் சேர்ந்த சுரேந்தர் மற்றும் தீர்த்தலிங்கம் ஆகியோர் 08.05.2013 புதன்கிழமை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க

ad

ad