புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. 


இவ்விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் தலைமையில் சங்க நிர்வாகிகள் நடிகர் சிவகுமார், ரவி கோட்டகரா, பொன் தேவராஜன், எடிட்டர் மோகன், கே.எஸ். ஸ்ரீனிவாசன், கே.பிரசாத் ஆகியோர் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து, இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

ad

ad