புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2013


மக்கள் டிவியை தடை செய்ய வேண்டும் என்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  புகார் மனு அளித்தனர்.
மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரை விழாவின் போது, மரக்காணத்தில் கலவரம் நடைபெற்றது. கலவரத்தை
கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாக பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தை தாமதமாக முடித்ததாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவின் முக்கிய தலைவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் மக்கள் டிவி மீதும் அன்புமணி ராமதாஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞர்கள் இரண்டு மனுக்களை  அளித்தனர்.
அந்த மனுவில்,  ‘’பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள், சாலைகளில் மரங்களை போடுவது போன்ற சம்பவங்களில் பாமகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பாமகவினர் செய்யும் வன்முறை சம்பவங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்வதாக அவதூறு பரப்புகின்றனர்.


மேலும் பாமகவின் மக்கள் தொலைக்காட்சியின் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு பரப்பி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராகவும் அவதூறு பரப்பி வரும் ராமதாஸ், காடுவெட்டி குரு, அன்பு ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தடை செய்து அதன் உரிமத்தை ரத்து செய்யவேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad