புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2013

விஜயகாந்த் கைகாட்டியதற்காக முகம் தெரியாத சாந்தியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர்: தேமுதிக கருத்து
சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சாந்தி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம்தேமுதிக என்ற கப்பலில் இருந்த துரு
உதிர்ந்து விட்டதாக தேமுதிக கொள்கைப் பரப்புச்செயலாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 
இந்நிலையில் சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் 29.05.2013 புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். 
(தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக சந்திரகுமார் உள்பட 6 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
தேமுதிக எம்எல்ஏ சாந்தி ஜெயலலிதாவை சந்தித்துது குறித்து, சமூக இணையதளமான ஃபேஸ்புக்கில் தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் கூறியதாவது:
தேமுதிகவில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் போய்விட்டார்கள். ஆனால் 60 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். 6 இலைகள் தான் உதிர்ந்துள்ளன. ஆனால் தேமுதிக என்ற ஆலமரம் தமிழகம் முழுவதும் வேரூன்றி பரவி வருகிறது. விஜயகாந்த் கைகாட்டினார் என்பதற்காக மட்டுமே முகம் தெரியாத சாந்தியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். அதற்கு அவர் காட்டும் விசுவாசம் இதுதானா.
மிக பெரிய கப்பலில் துரு பிடித்த இடம் தானாக உதிர்வது போல தேமுதிக என்ற கப்பலில்இருந்து துரு உதிர்ந்து விட்டது. இதற்கெல்லாம் இந்த கப்பல் ஆடாது என்று அவர்தெரிவித்துள்ளார்.

ad

ad