புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013




         ""ஹலோ தலைவரே... ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் நான்காம் ஆண்டு நிறைவு சாதனை விழா அமர்க்களமா நடந்திருக்குது.''


""ஆமாப்பா.. ஐ.மு.கூ. ஆட்சி அமைய காரணமா இருந்த தி.மு.க.வும்  இந்த விழாவில் இல்லை. திரிணாமூல்  காங்கிரசும் இல்லை. இரண்டு கட்சிகளும் கூட்டணியிலிருந்து விலகி விட்டதால, இருக்கிற கட்சிகளை வைத்துக் கொண்டு பிரதமரும் சோனியாவும் காங்கிரஸ் கட்சியும் சமாளிக்க வேண்டியதாயிடிச்சி.''

""கூட்டணியை ஆதரித்துக்கொண்டிருக்கும் ராஷ்ட்ரிய ஜனதாதள  கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐ.மு.கூ.வின் நான்காம் ஆண்டு விழா விருந்திலே கலந்துக்கிட்டாரு. இவர்தான், கூட்டணியிலிருந்து தி.மு.க விலகுனப்ப, உங்க தலைவர் கலைஞர்கிட்டே அவசரப்பட வேண் டாம்னு சொல்லுங்க. 2 மாசம் பொறுத்து விலகினால் நானும் உங்ககூட வந்திடுறேன்னு சொன்னவரு. கூட்டணியில் நீண்டகாலமா நீடிக்கிற கட்சி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்.''



""அவரும் அடிக்கடி தன்னோட அதிருப்தி யை வெளியிட்டவர்தானே. ..''


""இப்பகூட டெல்லி வட்டாரத்தில் தனக்கு நெருக்கமானவங்ககிட்டே பேசுறப்ப, இந்தக் கூட்டணி அர சாங்கத்தில் என்ன நடக்கு துன்னே எனக்குத் தெரியல. வரும் எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக சீட்  ஜெயிக்காது. மாநிலக் கட்சிகளின் தயவில் தான் மத்தியில் ஆட்சி அமையும். தமிழ்நாட் டில் தி.மு.க, ஆந்திரா வில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகளின் செல்வாக்கு மத்தியில் ஆட்சியமைப்பவங் களுக்குத் தேவைப்படும்னு சொல்லிக்கிட்டிருக் காரு. விருந்தில் கலந்துக்கிட்ட தேசிய  மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்பட எல்லோருமே இதே கணக்கில்தான் இருக்காங்க.''

""காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் நான் காண்டுகளை மதிப்பிட்டு ஊடகங்களில் அலசல்களும் கருத்துக்கணிப்புகளும் வெளியானதே, அதிலும்கூட வரும் எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட்டுகள்தான் கிடைக்கும்னும், மோடி தலைமை யில் பா.ஜ.க களமிறங்கினா அதிக சீட்டுகள் ஜெயிக்கும்னும் கணிப்புகள் வருதே.. தமிழ்நாட்டிலும் தேர்தல் ஜூரம் பரவிக்கிட்டிருக்குமே..''


""அ.தி.மு.க.வின் கூட்டணி வியூகம் பற்றி நாம அடிக்கடி பேசியிருக்கோம். தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, விஜயகாந்த் வருவாரா என்பதுதான் அரசியல் வட்டார எதிர்பார்ப்பு. தே.மு.தி.க. தொண்டர்களும் தி.மு.க.வுடன்தான் கூட்டணிங்கிற மனநிலையில் இருக்காங்க. விஜயகாந்த்தோ அவசரப்படாமல் வெயிட் பண்ணிக்கிட்டிருக்காரு. அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாங்க இதே கூட்டணியில்தான் நீடிக்கிறோம். கலைஞரையும் ஸ்டாலினையும் அடிக்கடி சந்தித்துப் பேசுகிறேன்னு சொல்லியிருக்காரே..''

""தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க. வரும்னும், அதனால சிறுத்தைகள் வெளியேறப் போறாங்கன்னும் வரும் தகவல்களால்தானே திருமா இப்படி சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கு. தி.மு.க. தரப்பிலும் பா.ம.க தரப் பிலும் கூட்டணி மூவ் மெண்ட் ஏதாவது நடந்துக் கிட்டிருக்கா?''

""தலைவரே.. .. ராமதாஸை விடுதலை செய்யணும்னு கலைஞர் அறிக்கை கொடுத்ததிலிருந்து தான் இப்படிப்பட்ட யூகம் வெளிப்பட ஆரம்பிச்சிது. தடையைமீறி போராட் டம் நடத்தப்போன ராமதாஸை ஜெ.அரசு கைது செய்தப்ப கலைஞர் எந்த அறிக்கையும் கொடுக்கலை. அதற்கப்புறம், ராமதாஸ் மேலே பழைய கேஸ்களையெல்லாம் தூசு தட்டிப் போட்டப்ப தான், பழிவாங்கும் நடவடிக்கையை கண்டிச்சி, அவரை விடுதலை செய்யணும்னு அறிக்கை விட்டார். அந்த அறிக்கையிலும் மாமல்லபுரம் மாநாட்டில் பா.ம.க. தரப்பு பேசியதைக் குறிப்பிட்டு, அவங்களுக்கு நாவடக்கம் வேணும்னு சொன்னாரு. கலைஞரோட இந்த அறிக்கையிலிருந்து தான் தி.மு.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய பேச்சுகள் கிளம்ப ஆரம்பிச்சிது.''

""ராமதாசுக்கு பைபாஸ் சர்ஜரி நல்லபடியா முடிந்து, அவரோட இதயத்தில் இருந்த ப்ளாக் அகற்றப்பட்டிருக்கு. மருத்துவமனைக்குப் போய் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் நலன் விசாரித்திருக்காரே…!''

""எந்தக் கட்சித் தலைவரா இருந்தாலும் அவங்க ஆஸ்பிட்டலில் அட்மிட்டானால் நலன் விசாரிப்பது கலைஞரோட இயல்பு. போன அ.தி.மு.க. ஆட்சியில் சபாநாயகரா இருந்த காளிமுத்து, உடம்பு முடியாம ஆஸ்பிட்டலில் இருந்தப்ப நேரி லேயே சந்திச்சி நலன் விசா ரிச்சவரு கலைஞர். பத்திரிகையாளர்கள் அட்மிட்டானாலோ அவங்க பெற்றோருக்கு உடம்பு சரியில்லைன்னாலோ கூட அதுபற்றி விவரம் கேட்டுத் தெரிஞ்சுக்குவாரு. அது அவருக்கு வழக்கம். அதுமாதிரிதான் தி.மு.க. நிர்வாகிகள்கிட்டே ராமதாஸ் உடல்நலன் பற்றி கலைஞர் விசாரிச்சிருக்காரு.''

""அந்த விசாரிப்பின்போது கூட்டணி பற்றியும் பேச்சு வந்ததாமே?''


""பா.ம.க.வோடு கூட்டணின்னு யாரும் பேசலையாம். துரைமுருகன் பேசுறப்ப மட்டும் பா.ம.க இப்ப நம்ம கூட்டணியில் இல்லை. அதனால விடுதலை சிறுத்தைகளும் வேண்டாம். ஒரு தரப்பு மட்டும் இருந்ததுன்னா அது இன்னொரு தரப்பை நமக்கு எதிராக்கிடும். இரண்டுமே இல்லைன்னா, நியூட்ரலான நிலை இருக்கும். இரண்டு தரப்பிலும் நம்மை ஆதரிக்கக்கூடியவங்க ஓட்டுப் போடுவாங்கன்னு சொல்லியிருக்காரு. அதற்கு கலைஞர் எந்த ரியாக்ஷனும் காட்ட லைன்னு அறிவாலய வட்டாரம் சொல்லுதுங்க தலைவரே.. வன்னியர்களைப் பொறுத்தவரை, ஜெ. தங்களைப் பழிவாங்கி கஷ்டப்படுத்துற இந்த நேரத்தில் கலைஞர்தான் அறிக்கை கொடுக்கிறார், கட்சி எம்.பி.யை அனுப்பி நலன் விசாரிக்கிறார்ங்கிற ஒரு ஆதரவு மனநிலை இருக்குது.'' 

""அது கூட்டணியா மாறும்ங்கிறதுதானே அரசியல் வட்டார எதிர்பார்ப்பு?''


""தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிற பா.ம.க. எம்.எல்.ஏ. குருதான் வன்னியர் சங்கத் தலைவர். அவர் ஜெயிலிலிருந்தே தி.மு.க.வுக்கு எதிரா கடுமையான கருத்துகளை தன் கட்சித் தலைமைக்கு சொல்லி அனுப்பியிருக்காராம். எம்.பி. தேர்தலில் நாலு சீட்டு ஜெயித்து, மத்திய மந்திரி பதவியை வாங்கிடணும்ங் கிறதுக்காக, நாம இத்தனை நாளா பேசிக் கிட்டிருந்ததுக்கு எதிரா முடிவெடுப்பதா என்னன்னு சீறலா கேட்டிருக்காராம்.''

""டாக்டர் ராமதாஸ் என்ன சொல்றாராம்? அவர் முடிவெடுத்துவிட்டால் கட்சி நிர்வாகிகள் எல்லோரும் கேட்டுத்தானே ஆவாங்க?''


""ஆபரேஷன் முடிந்து  ஆஸ்பிட்டலில்  இருக்கும் ராமாஸ், தன்னை கட்சிக்காரங்க யாரும் சந்திக்கிறதுக்கு அனுமதிக்கிறதில் லையாம். பேப்பர்களையும் பத்திரிகைகளையும் கவனமா  படிக்கிறாரு. அதில் பா.ம.க பற்றி வரும் செய்திகளை அன்புமணிகிட்டேயும்  குடும்பத்தினர்கிட்டேயும் பகிர்ந்துக்குறாரு. தி.மு.க.-பா.ம.க. கூட்டணின்னு வெளியாகும் செய்திகளைப் பார்த்துட்டு, நாம இந்த 6 மாசமா ஊர் ஊராக் கூட்டம் போட்டு திராவிட இயக்கங்களே இருக்கக் கூடாதுன்னும் அந்தக் கட்சிகளோடு கூட்டணி கிடையாதுன்னும் பேசிட்டு வந்திருக்கோம். அந்தக் கூட்டங்களில் ஜெயலலிதாவைவிட கலைஞரைத்தான் கண்டபடி விமர்சித்திருக்கோம். ஆனா ஜெ.தான் இப்ப நம்ம மேலே  தேசிய பாதுகாப்பு சட்டம், வன் முறைக்கு நட்ட ஈடு, கட்சிக்குத் தடைன்னு பா.ம.க.வையே அழிக்கப் பார்க்கிறார். ஆளுங்கட்சியால ஒடுக்கப்படும்போது அதைத் தாங்க முடியாம, எதிர்க்கட்சிப் பக்கம் போவதுதானே அரசியலில் வழக்கம். ஆனா, திராவிட இயக்கங்களுக்கு எதிரா நாம மக்கள்கிட்டே நிறைய  கொண்டு போயிட் டோம். திடீர்னு எப்படி மாற்றிக்கொள்வது? அதனால் தனித்துப்  போட்டிங்கிற நம்ம நிலையிலேயே இருப்போம். விடுதலை செய்யச் சொன்ன கலைஞருக்கு நன்றி சொல்லிக்கலாம். இதை பிரஸ்ஸில் சொல்லிடுன்னு அன்புமணிகிட்டே சொன்ன ராமதாஸ், ஒருவேளை நாம தனித்துப் போட்டியிடுவது ஜெ.வுக்கு சாதகமாப் போகும்னா வேற வழியை யோசிப்போம். தேர்தலுக்கு இன்னும் டயம் இருக்குதுல்ல.. அப்ப பார்த்துக்கலாம்னு ராமதாஸ் சொல்லியிருக்காராம்.''

""ஓ...… அதனாலதான் வியாழக்கிழமையன்னைக்கு பிரஸ்ஸை சந்தித்த அன்புமணி, இன்னும் சில நாட்களில் ராமதாஸ் பூரண குணமடைந்துவிடுவார்னும் எம்.பி. தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி கிடையாதுன்னும் , தனித்துப் போட்டிங்கிறதில் மாற்றமில் லைன்னும் சொன்னாரா?''

""ஆமாங்க தலைவரே..  .. அடுத்த மேட்டருக்கு வர்றேன்.. பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில்  நடக்கும்  சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி பால கிருஷ்ணாகிட்டே ஜெ. தரப்பு வக்கீல்களும் சாட்சிகளும் டோஸ் வாங்கியிருக்காங்க. செவ்வாய்க் கிழமையன்னைக்கு ஓ.எஸ்.மணி யன் உள்பட 7 பேர்கிட்டே சாட்சி விசா ரணை நடந்திருக்கணும். ஆனா, வழக்கு சம்பந்தமா சில தவறான தகவல்களை தன்னோட வக்கீல்கள் சொல்லிட்டதா திங்கட் கிழமையன்னைக்கு அவங்களைக் கூப்பிட்டு செமத்தியா டோஸ் விட்டிருக்கிறார் ஜெ. அந்த வக்கீல்கள்தான் ஓ.எஸ்.எம் உள்ளிட்ட சாட்சிகளுக்கு, கோர்ட்டில்  எப்படி பேசணும்னு ட்ரெய்னிங் கொடுக்கணும். டோஸ் வாங்கிய அதிர்ச்சியில் அவங்க  ட்ரெய்னிங் கொடுக்கலை. அதனால கோர்ட் டில் எதையாவது சொல்லி, புதுசா சிக்கல் வந்திடப் போகுதோன்னு சாட்சிகள் பெங்களூருக்கே போகலை. ஜெ.விடம் டோஸ் வாங்கிய வக்கீல்களும் கோர்ட்டில் ஆஜ ராகலை. அதனால, வேறு சாட்சிகளை விசாரிங்கன்னு ஜூனியர் வக்கீல்கள் சொல்ல, டென்ஷனான நீதிபதி பாலகிருஷ்ணா, நான் போட்ட ஷெட்யூல்படி சாட்சிகள் ஆஜராகணும். இல்லைன்னா அரஸ்ட் வாரண்ட் போட்டுடு வேன். வழக்கை இழுத்தடிக்க இதுபோன்ற வேலைகளை செய்தால், சாட்சி விசாரணை யையே ரத்து பண்ணிடுவேன்னு ஹை டெசிபலில் சொல்லியிருக்காரு.''

""உள்துறைச் செயலாளர் ராஜகோபால் பவர் இல்லாத பவர் ஃபைனான்சுக்கு மாற்றப் பட்டு, நிரஞ்சன் மார்ட்டி புதிய உள்துறைச் செயலாளரா நியமிக்கப்பட்டது சம்பந்தமாக வும் கோட்டை வட்டாரத்தில் நிறைய தகவல்கள்  சொல்றாங்க போலிருக்கே.''… …

""ஆமாங்க தலைவரே.. .. ராஜகோபா லுக்கும் டி.ஜி.பி. ராமானுஜத்துக்குமான உரசல் களை நம்ம நக்கீரனில் விரிவா படிச்சிக்கலாம். மற்ற அதிகாரிகளோடும்  ராஜகோபால் உரசல் போக்கிலேதான் இருந்திருக்காரு. அவருக்கு பக்கபலமா அப்போதைய தலைமைச்  செயலாளர் சாரங்கி, சி.எம். செகரட்டரி  வெங்கட்ராமன், ஆலோசகரான பத்திரிகை காரர் மூணுபேரும் இருந்ததால பவர்ஃபுல் லாகவே வலம் வந்தாரு ராஜகோபால். சி.எம். அலுவலகத்தில் உள்துறை விஷயங்களைப் பார்த்துக்கிட்டிருந்தவர் செகரட்டரி ஷீலா ப்ரியா. அவர்கிட்டேயிருந்து அது வெங்கட் ராமன் கைக்கு வந்தது. அதிலிருந்து, ராஜ கோபால் சம்பந்தமான நெகட்டிவ் விஷயங் கள் எதுவும் ஜெ. கவனத்துக்குப் போகாமல் பார்த்துக்கிட்டாராம் வெங்கட் ராமன்.'' 

""அப்படின்னா கோட் டையில் ராஜகோபாலோட ராஜாங்கம்தான்னு சொல்லு.''…


""அவர் தன்னோட அலு வலகத்துக்கு வரும்போது, அதற்கு முன்னாடி இருக்கும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் அலுவலக வாசலில் யாராவது  நின்னாங்கன்னா அவங்களையெல்லாம் உள் துறை அலுவலக ஆட்கள் உள்ளே போகச்  சொல்லிடு வாங்களாம்.  அடிஷனல் ஹோம் செகரட்டரியான அமுதா ஏதாவது ஃபைல் பார்க்கணும்னா அதையும்கூட ராஜகோபால் அனுமதிக்க மாட்டாராம். ராஜகோபாலின் மனைவி மீனாட்சியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான். அவரே தலைமைச் செயலாளர் ஷீலாபாலகிருஷ்ணன்கிட்டே  தன் னோட கணவரைப் பற்றி புகார் தெரிவிச்சிருக்காருன்னா பார்த்துக்குங்க. தனக்கு எதிரா ஏதோ நடக்குதுன்னு தெரிஞ்சதும் சி.எம் செகரட்டரியா போயிடலாம்னு ப்ளான் பண்ணி, வெங்கட்ராமன் மூலமா மூவ் பண்ணி யிருக்காரு. முடியலை. பதவி மாற்ற உத்தரவு வந்ததும், ஒரு  சூட்கேஸ் நிறைய பேப்பர்களை அள்ளிக்கிட்டு வீட்டுக்குப் போய் எரிச்சிட்டாராம். எல்லாமே புகார்களும் கோரிக்கை களுமாம். புது உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, மு.க.ஸ்டாலின் துணை முதல்வரா இருந்தப்ப  அவருக்குத் துணையா இருந்த 3 முக்கிய அதிகாரிகளில்  ஒருவர்.''

""ஸ்டாலின்னு சொன்னதும் ஞாபகம் வருது. நான் அழகிரி சம்பந்தமான ஒரு  தகவலோடு லைனில் இருக்கேன். சென்னையில்  இருக்கும் அழகிரி தனக்கு நெருக்கமானவங்களை மட்டும் சந்திக்கி றாரு. ஒரு தகவலையும்  சொல்றாராம். துரைமுருகன் என்னை சாப்பிடக் கூப்பிட்டிருந்தாரு. அவர் வீட்டுக்குப் போனேன். 4 மணிநேரம் பேசிக்கிட்டி ருந்தேன். வெளிப்படையா எல்லாத்தையும் சொல்லிட்டேன். எனக்கோ  என் மகனுக்கோ எம்.பி. பதவி தேவையில்லை. ஆனா ஸ்டாலினை கட்சித்தலைவ ராகவோ முதல்வராகவோ நான் வர விடமாட்டேன்னு சொல்ல, இதை உங் கப்பாகிட்டே சொல்லுன்னு துரைமுருகன் சொன்னார். நான் கோபாலபுரத்தில் அம்மாவை மட்டும் பார்த்துட்டு வந் திடுறேன். அப்பாவைப் பார்க்கிறதில் லைன்னு சொன்னேன். இந்நேரம் எல்லாத் தகவலும் துரைமுருகன் மூலமா  போக வேண்டிய இடங்களுக்குப் போயிருக்கும்னு அழகிரி சொல்றாராம்.''

படங்கள் : ஸ்டாலின்



 லாஸ்ட் புல்லட்!

திருச்சி-ஸ்ரீரங்கத்தில்  நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக 24-ந் தேதி ஜெ. நேரில்  வருவதாகத் திட்டமிடப்பட்டு, ஸ்ரீரங்க வீதியில் மேடை அமைக்கும் பணியும் நடந்துகொண்டிருந்தது. பழமைவாய்ந்த அகோபில மடத்தின் 45-வது ஜீயர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு 10 நாள் தீட்டுக் கழிக்க பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால் ஜெ.வின் ஸ்ரீரங்கப் பயணம் ஜூன் 2-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீலகிரியில் இளைஞர் படுகர் சங்கம் வலிமையான அமைப்பு. இதன் தலைவராக தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குண்டன் இருந்தார். சங்கத் தேர் தலை நடத்தவில்லை, கணக்குகளைக் காட்டவில்லை, மீட்டிங் போடவில்லை என்று குண்டனை நீக்கிவிட்டு 30 பேர் கொண்ட கமிட்டியமைத்து தற்காலிகத் தலைவராக ஜே.பி.சுப்ரமணியத்தைத் தேர்வு  செய்திருக்கிறார்கள். 2 மாதத்தில் சங்கத் தேர்தல் நடத்தி புதுத் தலைவரைத் தேர்வு செய்யப் போகிறார்களாம். நீலகிரி பழங்குடி மக்கள் சங்கத்தில் முக்கியமானது இச்சங்கம்.

டெல்லியிலிருந்து கோவைக்கு அரக்கோணம் வழியாக 150 ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் ஏற்றிக்கொண்டு மே 19-ந் தேதியன்று ஒரு சிறப்பு ரயில் வந்தது. அரக்கோணத்தில் 42 மணிநேரம் அந்த ரயில் நிறுத்தப்பட்டதால் ராணுவவீரர்களுக்கு குடிதண்ணீர், உணவு தீர்ந்துபோனது. ஆயுதங்கள் ஏற்றி வந்த ரயில் என்பதால் ராணுவ ஆணைப்படி வீரர்கள் அந்த ரயிலை விட்டுவிட்டுப் போக முடியாது. பசியாலும் தாகத்தாலும் பொறுமையிழந்த ராணுவ வீரர்கள், ரயில் டிரைவரை நையப் புடைத்தெடுத்துவிட்டனர்.

ad

ad