புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2013


யூசுப் பதான், காலிஸ் ஆட்டத்தால் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 47-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
 
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் பேட்டிங் தேர்வு செய்தார். முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருந்ததால் இரண்டு அணியிலும் வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர்களை  களம் இறக்கினர்.
 
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன்- ரகானே களம் இறங்கினார்கள். ரகானே 6 ரன்னில் செனநாயகே பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு வாட்சன் உடன் பால்க்னர் ஜோடி சேர்ந்தார். இவர் 1 ரன் எடுத்த திருப்தியில் இக்பால் அப்துல்லா பந்தில் ஆட்டம் இழந்தார். நிதானமாக ஆடிய வாட்சன் சுழற்பந்தில் ரன் எடுக்க திணறினார். அவர் 34 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும்.
 
அதன்பின் வந்த சாம்சன் சிறப்பாக விளையாடி 40 ரன்களும், ஒவைஷ் ஷா 24 ரன்களும் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது. டிராவிட் 8-வது வீரராக களம் இறங்கி 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
 
இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக காம்பீர்- பிஸ்லா களம் இறங்கினார்கள். பிஸ்லா சிறப்பாக விளையாடி 29 ரன்னில் ஆட்டம் இழந்தார். காம்பீர் 12 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
 
2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த காலிஸ்- யூசுப் பதான் அருமையாக விளையாடி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தனர். கொல்கத்தா அணி 17.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 133 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பதான் 49 ரன்களுடனும், காலிஸ் 33 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
 
கொல்கத்தா அணிக்கு ராஜஸ்தான் சுழற்பந்து வீரர்களால் நெருக்கடி கொடுக்க முடியாமல் போனதே அந்த அணியில் தோல்விக்கு காரணம் ஆயிற்று.

ad

ad