புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013


தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன்
பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் மறைவுக்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,


’’தமிழ்த் திரை இசை உலகில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் கம்பீரமான குரலில் முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு உணர்ச்சிகளை, அவற்றிகுரிய பாவம் பழுதுபடாமல், மிகச் சரியான உச்சரிப்புடன், ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவர் நெஞ்சில் பதியத் தக்க வகையில், சுருதியும், லயமும் களையாமல், பல நூறு பாடல்கள் பாடி, உலகத் தமிழர்களின் உள்ளங்களைப் பரவசப்படுத்திய தேவ கானக் கலைஞர் டி.எம்.எஸ்., அவர்களுடைய மறைவு, இசையை நேசிக்கும் ஒவ்வொருவர் இருதையத்தையும் நிச்சயம் இரணப் படுத்தியிருக்கும்.
டி.எம்.எஸ்., தமிழ்த் திரை இசையுலகின் தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம். அவருடைய உருவம், இன்று மண்ணில் இருந்து மறைந்தாலும், இசையில், இறைமையைக் காணும் கடைசித் தமிழன் உள்ள வரை, அவருடைய குரலில் இழைந்த அமர கானங்கள் அனைத்தும், காற்றில் கலந்து காதுகளை அன்றாடம் கௌரவித்துக் கொண்டேயிருக்கும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad