புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


வரும் எம்.பி தேர்தலில் திமுக தனித்து நின்றாலே 20 இடங்களில் வெற்றி பெறும் என கே.என்.நேரு பேசினார்.
திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் வாளாடி கந்தசாமி தலைமை வகித்தார்.
வனத்துறை அமைச்சர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேரு பேசியதாவது:

ஜூன் 3ம் தேதி திமுக தலைவர் கலைஞரின் 90வது பிறந்தநாள் வருகிறது. இதனை திருச்சி மாவட்ட திமுக சார்பில் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும். கலைஞர் இந்த வயதிலும் எவ்வித தடங்கலுமின்றி கட்சி மற்றும் சமுதாய பணியை திறம்பட செய்து வருகிறார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இன்று வரை தினசரி பத்திரிக்கைகள் முதல் வார பத்திரிக்கை வரை அனைத்திலும் அவரை வாழ்த்தியோ, திட்டியோ விமர்சனம் இருக்கும். அவரை பற்றிய செய்தி வராத நாளே இல்லை. அந்த அளவுக்கு தமிழக அரசியலில் ஒதுக்க முடியாத சக்தியாக விளங்குகிறார்.

முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் தலைவரின் 60வது பிறந்தநாளையொட்டி குளித்தலையில் பொதுக்கூட்டம் நடத்தி தலைவருக்கு 60 பவுன் தங்க சங்கிலி அணிவித்தார். அதைபோலவே இப்போது நாம் தலைவரின் 90வது பிறந்தநாளையொட்டி, திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தி 90 பவுன் அல்ல. அவர் இன்னும் 10 ஆண்டுகள் கூடுதலாக வாழ வேண்டும் என வலியுறுத்தி 100 பவுன் தங்க சங்கிலி அணிவிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான தேதியை கேட்டு பெற உள்ளோம்.

சட்டசபையில் பேச முடியாத நிலை உள்ளதால், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. வருங்காலம் நமக்கு சிறப்பாக அமையும். அதிமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டதையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.100 கோடிக்கு பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் இந்த ஆட்சியை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளனர். தமிழகத்தில் மின்நிறுத்தமே இல்லை என மின் துறை அமைச்சர் சட்டசபையில் பேசும்போதே, அங்கு மின்தடை ஏற்படுகிறது. இவர்கள் சட்டசபையில் அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்ற குறைந்தபட்சம் 25 ஆண்டு ஆகும். தினமும் ஏதாவது அள்ளி விடுகின்றனர். ஆனால் அந்த அறிவிப்புகளை செயல்படுத்த நிதி இல்லை.

தற்போது நம்முடன் காங்கிரஸ் இல்லை. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தான் உள்ளன. எனவே எம்.பி தேர்தல் எப்படி இருக்கும் என பலரிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்போதுள்ள நிலையில் விஜயகாந்த் அதிமுகவுக்கு போனால் தான் நமக்கு கஷ்டம். ஒன்றுக்கு இரண்டு என ஓட்டுகளை பெற வேண்டும். ஆனால் அவர் அங்கு போகவில்லை என்றாலோ, தனித்து நின்றாலோ கண்டிப்பாக அனைத்து தொகுதியிலும் நாம் தான் ஜெயிப்போம். யாருடைய கூட்டணியும் இல்லாமல் திமுக 20 இடங்களில் நிச்சயம் ஜெயிக்கும் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. எனவே கட்சியினர் உற்சாகமாக பணியாற்ற வேண்டும். தலைவரின் 90வது பிறந்தநாளை குடும்ப விழாவாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு கே.என்.நேரு பேசினார்.

ad

ad