புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், நாம் தமிழர் நடத்தும் இன எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தினப் பொதுக்கூட்டம் பேரணி நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தை உள்ளரங்கில் வைத்து நடத்த நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி, கடலூரில் சிதம்பரம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் உள்ளரங்கு மாநாடாக இதனை நடத்துகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்தியதால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுவதாக போலீஸார் கூறியுள்ள நிலையில், உள்ளரங்குக் கூட்டமாக நடக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜம்மு  காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கும் கலந்து கொண்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்தக் கூட்டம் தற்போது திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

ad

ad