புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2013

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சுமார் 4 கோடியே 36 லட்சம் வாக்காளர்களை
கொண்ட கர்நாடக மாநிலத்தின் 224 தொகுதிகளில், ஒரு எம்.எல்.ஏ. இறந்ததை அடுத்து 223 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய மக்கள் வாக்களித்தனர். நேற்று மாலை 6 மணிவரை நடந்த வாக்கெடுப்பில் 65 சதவிகித வாக்குகள் பதிவாயின. 

இந்த தேர்தலின் கருத்துக்கணிப்புகள் குறித்து பிரபல தொலைக்காட்சி கூறியிருப்பதாவது:- 

நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 110 முதல் 116 வரை சீட்டுகள் கிடைக்கும். மேலும் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு 43-53 சீட்டுகளும், தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 43 முதல் 53 வரை சீட்டுகளும் கிடைக்கும். 

முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவின் ஜனதா கட்சிக்கு 10 சீட்டுகளுக்கு மேலும், உள்கட்சிப்பூசல் மற்றும் தேர்வு குறைபாடு காரணமாக 16-24 சுயேச்சைகள் வர வாய்ப்புள்ளது. 

இவ்வாறு அது கூறியுள்ளது. 

தற்போதைய சட்டசபையில், ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு 5 சுயேட்சைகள் ஆதரவுடன் 115 சீட்டுகளும், காங்கிரசுக்கு 80 சீட்டுகளும், மதச்சார்பற்ற ஜனதா தளம்-28 எம்.எல்.ஏ-க்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad