புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013





        ""ஹலோ தலைவரே... பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ்ஷெரீஃப் கட்சி ஜெயிச் சிருக்குது. தலிபான் தீவிர வாதிகளோட மிரட்டலை மீறி மக்கள் அதிகளவில் வாக்களித்ததால இந்த முறை பாகிஸ்தானில் உண்மை யாகவே ஜனநாயகம் ஜெயிச் சிருக்குது.''

""அது மட்டுமில்லப்பா.. பாகிஸ்தானில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அரசு, முழுசா ஆட்சி  செய்து அதன்பிறகு மீண்டும் ஜனநாயக முறைப் படி  தேர்தல் நடந்ததும் இந்த முறைதான். அதில்தான் நவாஸ் ஷெரீஃப் கட்சி ஜெயிச்சிருக்குது.''

""தலைவரே.. ..பாகிஸ்தான் தேர்தலையும் அதில் நவாஸ் ஷெரீஃப் வெற்றி பெற்றதையும் இந்தியா பாசிட்டிவ்வாகத்தான் பார்க்குது. இருநாட்டுக்கிடையிலான பிரச்சினைகளைக் குறைத்து, சுமுகமான உறவை மேம்படுத்த நவாஸ் ஷெரீஃப் கைகொடுப்பாருங்கிறது இந்தியாவோட நம்பிக்கை. ஆனா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளோ சீன ஆதரவு நிலையிலே இருக்காங்க. அவங்களை எப்படி நவாஸ் தன் பக்கம் இழுத்து, இந்தியாவுடனான உறவை மேம்படுத்தப் போறாருங்கிறதுதான் முக்கியமானது.''

""பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானோட கட்சி கணிசமா வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்திருக்குதே?''


""தேர்தல் பிரச்சாரத்தின்போது மேடை சரிந்து  படுகாயமடைந்த இம்ரானுக்கு இந்த வெற்றி, மிகப் பெரிய  பரிசு. ஆனா, அவர் தீவிரவாதிகள் விஷயத்தில் கடுமையா இருப்பதில்லை. கண்டுக்காமல் இருப்பவர். இந்தியாவுடனான உறவு மேம்படணும்னா பாகிஸ் தானில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படணும். அந்த விஷயத்தில் நவாஸோடு இம்ரான் எந்தளவு ஒத்துழைப்பாருன்னு போகப் போகத்தான் தெரியும். இந்தத் தேர்தலில் பெனாசிர் புட்டோவின்  கட்சி- அதாவது அவரோட கணவரும் மகனும் வழிநடத்துன கட்சி படுதோல்வியடைந்ததற்கு காரணம் மூன்று அம்சங்கள்தான். 1. ஊழலோ ஊழல். 2. செயல்படாத நிர்வாகம் 3.வரலாறு காணாத பவர்கட்.''

""ஓ… அங்கேயும் இங்கே மாதிரிதானா!''


""இங்கே குற்றச்சாட்டுக்குள்ளான சட்ட அமைச்சர்  அஸ்வனிகுமாரும், ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலும் ஒருவழியா ராஜினாமா பண்ணிட்டாங்க. இந்த விவகாரத்தில் சோனியாகாந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் கருத்து வேறுபாடு இருப்பது காங்கிரஸ் வட்டாரத்திலும் அதற்கு வெளியிலும் வெளிப்படையாகவே தெரிஞ்சிடிச்சி. மன்மோகன்சிங் தன்னோட பிரதமர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு அமெரிக்காவிலேயே செட்டிலாயிடலாம்னுகூட நினைக்கிற அளவுக்கு நிலைமை உருவாகியிருக்கு. திடுதிப்புன்னு அவர் கிளம்பிட்டாருன்னா மிச்சமிருக்கிற ஆட்சிக்காலத்துக்குப் புதுசா ஒரு பிரதமரை செலக்ட் பண்ணுறது ரொம்ப கஷ்டமாச் சேன்னு சோனியா யோசிக்கிறாராம். இரண்டு தரப்புமே நெருக்கடிக்குள்ளாகியிருப்பதை சீனியர்களான அகமது பட்டேல், குலாம்நபி ஆசாத் இவங்களோடு நெருக்கமானவங்க சொல்றாங்க.''

""சீனியர்களோடு  பிரதமரும் சோனியாவும் முதலில் நடத்துன உயர்மட்டக் கூட்டத்தில் இரண்டு மந்திரிகளும் ராஜினாமா செய்ய வேண்டாம்னுதானே முடிவெடுக்கப்பட்டது?''


""ஆமாங்க தலைவரே.. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூக்குரல் போடுவதற்கெல்லாம் பணிஞ்சிடவேண்டாம்ங்கிறதுதான் அப்ப எடுத்த முடிவு. ஆனா சட்ட அமைச்சர் அஸ்வனிகுமாருக்கு சுப்ரீம்கோர்ட்டும், ரயில்வே அமைச்சர் பன்சாலுக்கு சி.பி.ஐ.யும் குட்டு வச்சி கிடுக்கிப்பிடி போட்டதால வேற வழியில்லாம ராஜினாமா செய்ய வேண்டிய முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்க வேண்டியதாயிடிச்சி. நிலக்கரி விவகாரத்தில் சி.பி.ஐ அறிக்கையைத் திருத்தம் செய்தாருங்கிறதுதான் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் மீதான குற்றச்சாட்டு. அவருக்கும் நிலக்கரி ஊழலுக்கும் தொடர்பில்லாதபோது யாருக்காக அவர் இதைத் திருத்தணும், அந்தத் துறைக்கு பொறுப்பு வகித்த பிரதமரைக் காப்பாற்றத்தானே, அதனால மன்மோகன்சிங் ராஜினாமா செய்யணும்னு பா.ஜ.க தன்னோட போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கு.''

""சரிதான்.. .. அமைச்சரவை மாற்றத்தால கபில்சிபலுக்குக் கூடுதலா சட்டத்துறை கிடைத்திருக்குதே!''


""ஏற்கனவே அவர் மனிதவள மேம்பாட்டையும் தொலைத் தொடர்புத்துறையையும் வைத்திருந்தார். மனிதவள மேம்பாட்டின் கீழ்தான் கல்வித்துறை வரும். காலேஜுக்கு அனுமதி தருவதெல்லாம் அந்தத்  துறையின் வேலைதான். அதன் மூலமா கட்சிக்கு இவ்வ ளவு தேர்தல் நிதி தரணும்னு கபில்சிபலுக்கு மேலிடம் ஃபிக்ஸ் பண்ண, அவர் தன்னால முடியாதுன்னு சொன்னதாலதான் அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டார். அப்பவே சட்டத்துறையை எதிர்பார்த் தார் கபில்சிபல். ஆனா அது அஸ்வனி குமாருக்குப் போனதில் கபிலுக்கு வருத்தம். இப்ப ஒரு  நெருக்கடியிலே கபில்சிபலுக்கே அந்தத் துறை கிடைச் சிருக்கு. பிரபல வக்கீலான அவருக்கு இந்தத் துறை பிடிச்சிருந்தாலும் இது ஒரு இடைக்கால ஏற்பாடுதான். எப்படியும் இதை ஆட்சி முடியும்வரை தக்க வச்சிக்கணும்ங் கிறதில் அவர் கவனமா இருக்காரு. அமைச்சரவை மாற்றம் சம்பந்தமா காங்கிரஸ் மேலிடம் தீவிரமா ஆலோசனைகள் நடத்திக்கிட்டிருக்கு. ப.சிதம்பரத்தின் அம்மா உடல்நலம்  சரியில்லாமல் இருப்பதால அவரைப் பார்ப்பதற்காக ப.சி. தமிழகம் வந்தபோது, மேலிடத்திலிருந்து அவசர அழைப்பு. உடனடியா டெல்லிக்குக் கிளம்பிட்டாரு.''

""மேலிடம்னாலே தீவிர ஆலோசனை நடக்கும் போலிருக்கு.''…


""ஆமாங்க  தலைவரே.. .. தமிழகத்தின் ஆட்சி மேலிடமும் தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகுதான் சட்டமன்றத்தில் பா.ம.கவின் வன்முறை பற்றிய அறிக்கையை வாசித்ததாம். திங்கட்கிழமையன்னைக்கு ஜெ. பேசுறப்ப, ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் தமிழகம் முழுவதும் 14 பஸ், 2 சரக்கு வாகனங்கள் உள்பட 16 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருக்குன்னும், ஒரு ஓட்டுநர் இறந்துள்ளதையும், வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதில் 2 பயணிகள் மரணமடைந்ததையும் குறிப் பிட்டுவிட்டு அரசு பேருந்துகள், தனியார் வண்டிகள் என 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு 2 பாலங்களை பா.ம.க.வினர் வெடி வைத்து தகர்த்ததையும் சொன்னார். அதோடு நெடுஞ்சாலைகளில் 120 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதையும் 45 மரங்கள் எரிக்கப்பட்டி ருப்பதையும் சொல்லி, இந்த சேதங்களின் மதிப்பு பல கோடி ரூபாய்னும் சொன்னார்.''

""நஷ்ட ஈட்டுத் தொகை பா.ம.கவிடம் வசூலிக்கப் படும்னும் சொல்லியிருக்காரே!''


""அது மட்டுமல்ல, இதுபோன்ற வன்முறைகளில் எந்தக் கட்சி ஈடுபட்டா லும் அந்தக் கட்சியைத் தடை  செய்ய இந்த அரசு தயங்காதுன்னும் சட்டமன்றத் தில் ஜெ. சொல்லியிருக்கிறார். வடமாவட்டங்களில் திரும்ப வும் வன்முறை தொடரும்னு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்குதாம். அதனால கோர்ட் மூலம் மூவ் பண்ணி, பா.ம.க.வுக்கு தடை  வாங்கு வதற்கான வேலைகள் ஒரு தரப்பால் மேற்கொள்ளப்பட்டிருக்கு. அதே நேரத்தில், சட்டமன்றத்திலும் பா.ம.க. வைத்  தடை செய்ய ஒரு தீர்மானம்  நிறை வேற்றி, அதன் தொடர்ச்சியா மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது தொடர்பாக வும் ஆட்சி மேலிடம் தீவிரமா ஆலோசித்த தாம். அதன் முடிவில், கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். இப்போதைக்கு தடையுத்தரவு தீர்மானம் வேண்டாம் என்பதால்தான் பா.ம.க.வின் பெயரைக் குறிப்பிடாமல் பொத்தாம்  பொதுவா, எந்தக் கட்சியாக இருந்தாலும்னு எச்சரிக்கை பாணியில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாம்.''

""சம்பந்தப்பட்டவங்களுக்கு எச்ச ரிக்கையோட  தன்மை புரிஞ்சிருக்கும்!''


""தலைவரே.. அடுத்த மேட்டருக்கு வர்றேன். மதுரைக்கு டாட்டா  சொல்லிட்டு, சென்னைக்கு மு.க.அழகிரி வரப் போறதை போனமுறையே  பேசியிருந் தோம். இடப்பெயர்ச்சி நடந்திடிச்சாம். நேரம் கிடைக்கும்போது மதுரைக்கு வந்து கட்சிக்காரங்களை சந்திக்கிறதுக்காக அவரோட மதுரை வீட்டை  கட்சி அலு வலகமா பராமரிக்க முடிவாகியிருக்குதாம். அழகிரி மகன் துரைதயாநிதி அமெரிக்கா  போனதா போன முறை சொல்லியிருந் தேன். ஏற்பாடுதான் ஆகியிருக்கு இன்னும் கிளம்பலை. குவாரி வழக்கில் துரை தயாநிதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் முன் ஜாமீனில், வெளிநாடு சென்றால் 10 நாட்களுக்கு முன்பே போலீசிடம் அனு மதி வாங்கணும்னு இருக்கு. வெளிநாட்டுப் பயணத்துக்கான போலீஸ் அனுமதி இன்னும் கிடைக்கலை. அவசரப்பட்டு கிளம்பி, முன்ஜாமீன் ரத்தாயிட்டால் என்ன பண்ணுவதுங்கிறதால சென்னையில் தான் துரை தயாநிதி தங்கியிருக்காராம்.''

""மதுரையில்  தேர்தல் நிதி அளிப்பு விழாக் கூட்டம் நடக்குதே.. அதில் மு.க.அழகிரி கலந்துக்குவாரா?''


""மு.க.ஸ்டாலின்கிட்டேதான் அந்த கூட்டத்தில் நிதி கொடுக்கப்போறாங்க. மாவட்ட தி.மு.க ரெடி  பண்ணியிருக்கும் போஸ்டரில் ஸ்டாலின்  பெயருக்கு அடுத்ததா அழகிரி பெயர் போடப்பட்டிருக்கு. ஆனாலும், அழகிரி அதில் கலந்துக்கிற நிலையில் இல்லையாம். ஆதரவாளர்களோடு கலந்துக்கணும்னு கலைஞரும் சொல்லியிருக்காரு. ஆனா, அழகிரி தன்னோட  நிலையில்தான் இருக்காராம். சென்னையில் இருந்தபடி மாநில அரசியலில் கவனம் செலுத்தணும்னு அவர் ஸ்கெட்ச் போட, மாநில அளவில் அழகிரிக்கு எந்தப் பொறுப்பும் கிடைச்சிடக்கூடாதுங்கிறதில் ஸ்டாலின் தரப்பு கவனமா இருக்குதாம்.''

""ம்...''

""நடிகர் விஜய் அடிக்கடி பொதுமக்களைக் கவரும் வகையில் ஏதாவது ப்ளான்  பண்ணுவது வழக்கம். ஏற்கனவே, சென்னை அரசு மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போட்டாரு. இப்ப திருச்சியில் 15 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்து  அசத்தியிருக்காரு. மாவட்ட விஜய் ரசிகர்  மன்றத் தலைவ ரான குடமுருட்டி கரிகாலன், தி.மு.க. பிர முகரான குடமுருட்டி சேகரின் தம்பி. அண்ணன், தம்பி மேலே கேஸ்கூட இருக்குது. ஜெ. ஆதரவாளரா இருக்கும் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இத னாலேயே இந்த திருமண விழாவுக்கு தேதியை உறுதி செய்யாமல் இருந்தாராம்.  கடைசியா, ஒருவழியா சமாதான மாகி திங்கட்கிழமையன்னைக்கு திருமண விழா நடந்தது.''

""விழாவில் விஜய்யோட ஆக்ஷன் எப்படி?''


""அவரைப் பார்க்க சரியான கூட் டம். கல்யாணத்தை நடத்தி வைத்துப்  பேசிய விஜய், என்னோட  மகனும் மகளும் அவங்க எதிர்காலத்தை அவங் களே தீர்மானிப்பாங்க. இந்த இலவச திருமணம், மக்கள் நல உதவியெல்லாம் என்னோட மன திருப்திக்காக செய்வது தான். இதனால அரசியலுக்கு வருவே னான்னு கேட்டால் என்னால இப்ப பதில் சொல்ல  முடியாது. எதிர்காலத் தில் எப்படி வேணும்னாலும் மாற லாம்னு சொன்னாரு. சரியா 40 நிமிடத்தில் ஃப்ங்ஷனை முடிச்சிட்டு விஜய் கிளம்பிட்டாரு.''

""அவர் பேசியதிலிருந்தே அரசியல் பற்றிய  அவரோட ஆர்வம் என்னன்னு தெரியுதேப்பா…..''


""முன்னாள்  வளர்ப்பு மகன் சுதாகரன் மேலே போடப் பட்ட ஹெராயின் கேஸில் ஒத்திவைக்கப்பட்ட  தீர்ப்பு இந்த திங்கட்கிழமை கொடுக்கப்படுவதா இருந்தது. அது  23-ந் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கு. இந்த கேஸில், ஜெ.வின் பழைய உதவியாளரான தோட்டம் பாஸ்கரும் சிக்கியிருக்காரு. அவரு கோர்ட்டிலேயே, 15 வருசம் பட்டபாடு போதாதா, சீக்கிரம் தீர்ப்பு சொல்லுங்கன்னு சத்தம் போட்ருக்காரு. வக்கீல்கள் வட்டாரத்தில் விசாரித்தால், தீர்ப்பு தேதி குறிக்கப்பட்டப்பபிறகு, மிரட்டல் தந்தி வந்தது என்பதையெல் லாம் காரணம் காட்டி நீதிபதிகளை மாற்றுவது வழக்கமில்லை. அதே நீதிபதி தான் தீர்ப்பு தரணும்னு சொல்றாங்க.''

""குற்றம்சாட்டப்பட்டவங்களே தீர்ப்பை சீக்கிரம் கொடுக்கச் சொல்லி எதிர்பார்க்குறாங்களே.. அப்புறம் என்ன சட்டச் சிக்கல்?''


""அரசு வக்கீல்கள் வட்டா ரத்தில் நான் விசாரித்த தகவலைச்  சொல்றேன். பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிற சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரைக்கும் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் ஃப்ரீயாகி விடக்கூடாதுன்னு இன்ஸ்ட் ரக்ஷனாம்.''


 லாஸ்ட் புல்லட்!

மறைந்த  முன்னாள்  அமைச்சர் நாஞ்சிலாரின் மனைவி இந்திரா. நாஞ்சி லார்  மறைவுக்குப்பிறகும் கட்சித் தொண் டர்கள்  ஒவ்வொரு பிறந்தநாள், நினைவு நாள் ஆகியவற்றுக்காக நாஞ்சிலார் வீட்டுக்கு வந்து அவரது படத்துக்கு அஞ் சலி செலுத்தும்போது அவர்களை அன் புடன் வரவேற்பவர் இந்திரா அம்மையார் தான். திடீர்  உடல்நலக்குறைவால் இந்திரா அம்மா மரணமடைய, கலைஞர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மு..கஸ்டாலின், அழகிரி, கனிமொழி என தி.மு.க.வின் முக்கிய தலைகள் நேரில் வர, கட்சித் தொண்டர் களும் திரண்டு வந்து நாஞ்சிலார் மனைவிக்கு அஞ்சலி  செலுத் தினர். கலைஞர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ""நாஞ்சிலார் அவர்கள் திராவிட இயக்கத்திலே பற்றுக் கொண்டு, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், எனக்கும் உற்ற துணையாக இருந்து அரும்பணியாற்றியவர். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர் ஆற்றிய உரைகள் என்றும் நினைவில் கொள்ளத்தக்கவை. அவர் முழு நேர அரசியல் பணியாற்றுவதற்கு இல்லத்தில் அவருக்குப் பெருந்துணையாக விளங்கிய அவரது துணைவியார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்காட்டில் நடந்த தி.மு.க இளைஞரணி பாசறைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டபோது திடீர் பதற்றத்தை ஏற்படுத்தினார் கலீல் ரகுமான் என்ற இளைஞர். பெட்ரோல் குண்டு வீச வந்ததாக அவரை எஸ்கார்டுகள் அப்புறப் படுத்தினர். மாவட்ட  பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவ லிங்கம் அந்த இளைஞருக்கு ஒரு பளார் விட்டார். வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளரான கலீல் ரகுமான், வீரபாண்டி ராஜாவுக்கு மா.செ. பொறுப்பு தரவேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்த வந்ததாகவும், நிர்வாகிகள் அனுமதிக்காததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகவும், அதுதான்  பெட்ரோல் குண்டு வீச்சு என மாறிவிட்டது என்றும் சேலம் தி.மு.க வட்டாரத்தில் செய்தி அடிபடுகிறது.



 சரத் பொன்சேகா வாக்குமூலம்!

இலங்கையின் ராணுவத் தளபதியாக சரத்பொன்சேகா இருந்த 2007ஆம் ஆண்டில் அவர் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற, இது விடுதலைப்புலிகளின் செயல்தான் என அப்போது செய்திகள் வெளியாயின. அண்மையில் ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் பொன்சேகாவிடம் அந்த தாக்குதல் பற்றிய உங்களின் வாக்குமூலம் தேவை என்றபோது, நான் சொல்வதை முழுமையாகப் பதிவு செய்தால் வாக்குமூலம் தருகிறேன் என்ற நிபந்தனையைத் தெரிவித்து அதை அந்த அதிகாரி ஏற்றுக்கொண்டபிறகுதான் வாக்குமூலம் அளித்திருக்கிறார்  பொன்சேகா.

அதில், என் மீதான தாக்குதலுக்கு புலிகள் காரணமல்ல. அவர்களைக் காட்டுக்குள்ளேயே நான் கட்டுப்படுத்தி வைத் திருந்தேன். எனக்கு அவர்கள் மீது சந்தேகம் இல்லை. என் மீதான தற்கொலைப்படைத் தாக்குதலை ஜனாதிபதியும் (ராஜபக்சே) கோத்தபாய  ராஜபக்சேவும்தான் ஏவினர். இலங்கையின் அதிர்ஷ்டம் நான் தப்பித்துவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சரத் பொன்சேகா.

ad

ad