புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


இலங்கையின் இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவுதின நிகழ்வுகள் வடமாகாணத்தின் பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன.BBC
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நேற்றைய தி
னமே தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தியதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வருடம் அங்கு இடம்பெற்ற வைபவம் தடுக்கப்பட்டதுடன், தொடர்ந்து படையினருடைய நெருக்குதல்களுக்கும் மாணவர்கள் ஆளாகியிருந்தனர். இதனால் இம்முறை ஒரு நாள் முன்னதாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்ளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றால், வன்முறைகள் இடம்பெறும் என கருதி யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் முன்னதாகவே பல்கலைக்கழகத்தைவிட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, இன்று அதிகாலை முதல் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் பெருளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
வீதித்தடைகள் போட்டு, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசியர்கள் தவிர்ந்த வேறு எவரும் உள்ளே செல்லாதவாறு படையினர் தடுத்திருந்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடுகல் தகர்ப்பு

இதேவேளை, வவுனியா சமளங்குளம் பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப்போரில் இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நடுகைக்கல் நேற்றிரவு அடையாளம் தெரியாவர்களினால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இவ்விடத்தில் நடத்துவதற்காக ஒழுங்கு செய்திருந்த அஞ்சலி நிகழ்வை நடக்கவிடாமல் செய்வதற்காகவே இது அடித்து நொறுக்கப்பட்டிருந்ததாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

இதற்கிடையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுடைய அலுவலகத்திலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்திலும் அந்தக் கட்சியினால் அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
ததேகூ நிகழ்வுகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா நகர சபை மண்டபத்தில் பிரதான அஞ்சலி நிகழ்வுகளும் கூட்டமும் இடம்பெற்றன. பெருமளவான மக்களும் பெற்றோரை இழந்த சிறுவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மெழுகு திரிகள் ஏற்றி இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் முக்கயஸ்தர் பவான், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த சிறி ரணதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

வன்னிப்போரில் பெற்றோரை இழந்த 100 சிறுவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபா நிதியுதவியும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

ad

ad