புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2013




               சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையான பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 
நக்கீரன் 
இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்த வன்முறை சம்பவங்களுக்கு பா.ம.க.மீது பல குற்றச்சாட்டுகளை சட்டமன்றத்தில் பதிவு செய்த ஜெயலலிதா, ""ஜாமீனில் வெளி வந்துள்ள ராமதாஸ் அபத்தமாகப் பேசியுள்ளார். நிகழ்த்திய வன்முறைகளிலிருந்து தப்பி விடலாம் என அவர் எண்ணுகிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க வன்முறையில் ஈடுபடுவது ஆகியவற்றை செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் அக்கட்சியையும் தடை செய்ய அரசு தயங்காது'' என்று தெரிவித்தார். 

ஜெயலலிதாவின் இந்த வார்த்தைகள், பா.ம.க.வுக்கும் ராமதாஸுக்கும் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்பதாகவே அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தின. அதேசமயம், ஜெயலலிதாவின் இந்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், ""ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற எண்ணத்தில் பா.ம.க. மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முதல்வர் அள்ளி வீசியிருக்கிறார். தமது விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ம.க.வை தடை செய்வோம் என்ற அளவுக்கு ஆத்திரத்தை உமிழ்ந்திருக்கிறார். 

பா.ம.க.மீது ஜெயலலிதா எந்த அளவுக்கு வஞ்சத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம். அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறைகள் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பா.ம.க. வை ஒடுக்க நினைக்கிறார். இந்த முயற்சி வெற்றி பெறாது. இன்றைக்கு பா.ம.க.விற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறை நாளை மற்ற கட்சிகளுக்கு எதிராகவும் ஏவப்படும். தமது அதிகார எல்லையை மறந்து பா.ம.க.வை தடை செய்யப்போவதாக கூறியிருக்கிறார். எந்த ஒரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. தமிழக அரசின் அனைத்து அடக்கு முறைகளையும் அச்சுறுத்தல்களையும் பா.ம.க. சட்டப்படி எதிர்கொள்ளும்''’’என்று மருத்துவமனையிலிருந்தபடி காட்டமாகவே பதில் தந்தார் ராமதாஸ்.

"தடை செய்வோம்' என ஜெயலலிதாவும் "தடை செய்கிற அதிகாரம் இல்லை' என ராமதாஸும் மோதிக்கொள்ளும் நிலையில் இது குறித்த வாத பிரதிவாதங்கள் அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் பரப்பரப்பாக நடக்கிறது. "யாருக்கு அதிகாரம் இருக்கிறது' என நாமும் விசாரணையில் இறங்கினோம். 

மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர், ""அரசியல் கட்சிகளை தடைசெய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்குத் தான் இருக்கிறது என்கிற ராமதாஸின் கருத்தே முதலில் தவறு. ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வதும் அதனை அங்கீகரிப்பதும்தான் அதன் வேலை. அதனால் ஒரு கட்சியின் பதிவையும் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய மட்டும் தான் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டே தவிர, கட்சியை தடை செய்யும் அதிகாரம் அதற்கு கிடையாது. ஆனால், இந்திய கிரிமினல் லா அமெண்மெண்ட் சட்டம் 1908-ன் படி தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது. 

சட்டம்-ஒழுங்கு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு அசோசியேசனையும் தடை செய்ய இச்சட்டத்தில் வழி இருக்கிறது. அசோசி யேசன் என்றால் எது என்பதையும் வரையறை செய்திருக்கிறார்கள். அதாவது, ஒருவருக்கு மேற்பட்டவர்கள் எந்த முறையில் கூடி இயங்கினாலும் அது அசோசியேசனாக கருதப்படும். அதனால் அது அரசியல் கட்சியாக இருந்தாலும் தொழிற்சங்கமாக இருந்தாலும் விவசாய சங்கமாக இருந்தாலும் அசோசியேசனாக எடுத்துக்கொள்ளமுடியும்'' என்கிறார்.

மேலும் கூறும்போது, ""இதற்கு ஒரு நல்ல ஆதாரமாக மேற்கு வங்க மாநில நிகழ்ச்சியைச் சொல்லலாம். சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்படி மாவோயிஸ்ட் கட்சியை மத்திய அரசு ஏற்கனவே தடை செய்துள்ளது. எனினும், கடந்த 2009ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் கட்சியின் தீவிர போராட்டங்கள் நடந்தன. அப்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சி அங்கு இருந்தது. எனவே, மாவோயிஸ்ட் கட்சியை அடக்குவதற்கு, கிரிமினல் லா அமெண்ட்மெண்ட் சட்டத்தின்படி மேற்கு வங்க அரசும் தடை விதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார். ஆனால், இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி மறுத்துவிட்டது. "தடை விதிப்பது ஜனநாயக விரோதமானது. எந்த கட்சிக்கும் தடைவிதிப்பது எங்கள் கொள்கை அல்ல. மாவோயிஸ்ட்டுகளோடு எங்களுக்கு நிறைய முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், அக் கட்சியை அரசியல் ரீதியாகத்தான் முறியடிக்க வேண்டும்' என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்'' என்கிறார் இரா.ஜவஹர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிமான் சந்துருவை சந்தித்து பேசிய போது,

’""கிரிமினல் லா அமெண் மெண்ட் சட்டம் 1908 என்பது இந்திய சுதந்திரப்போராட்டத்தை நசுக்கு வதற்காக பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம். அதில் சில திருத்தங்கள் பிறகு செய்யப் பட்டன. அன்று வி.ஜி.ராவ் அண்ட் ரெட்டி என்கிற பெயரில் ஒரு சட்டக் குழுமத்தை வைத்திருந்த ராவ், பீப்பிள் எஜூகேஷன் சொசைட்டி ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த சட்டத்தை பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த சொசைட்டி உதவி செய்வதாக சொல்லி அதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்த சூழலில், 1950-ல் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. அதில் பல்வேறு அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், சொசைட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராவ், "அரசியலமைப்பு சட்டம் வந்தாச்சு. அச்சட்டம் கொண்டுவரப்பட்டதால் அந்த சட்டத்திற்கு விரோதமாக உள்ள  முந்தைய சட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது. அதனால் என் சொசைட்டிக்கு தடை இருப்பது சட்ட விரோதம்' என்று வாதிட் டார். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச், தடையை நீக்கியது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டுக்குப் போனது மெட்ராஸ் ஸ்டேட். ஆனால், சுப்ரீம் கோர்ட் ஹைகோர்ட் தீர்ப்பை உறுதி செய்து அப்பீலை தள்ளுபடி செய்தது. ராவ் ஜெயித்தார். அதன்பிறகு தான் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம், அதனை அடுத்து பல்வேறு தடுப்பு காவல் சட்டங்கள் எல்லாம் படிப்படியாக கொண்டு வரப்பட்டன..

கலைஞர் ஆட்சியில் அல்-உம்மா இயக்கத்தை தடை செய்ய முடிவெடுக்கப்பட்ட போது அது குறித்து ஒப்பீனியன் கேட்கப்பட்டது. தடை செய்ய முடியும் என சட்டத்துறை சொன்னது. அதன்படி அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. 

அதையடுத்து அல்-உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்டதற்கான காரணங்களை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தில் அல்-உம்மா அப்பீல் செய்யவில்லை. மாறாக சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் வழக்குப்போட்டது அல்-உம்மா. ஆனால், இதனை தள்ளுபடி செய்தார் நீதிபதி கோவிந்தராசன். அடுத்து இதே சட்டத்தை வைத்து பழ.நெடுமாறனின் தமிழ்த்தேசிய கட்சியையும் தமிழரசனின் தமிழர் விடுதலை படையையும் தடை செய்தார் ஜெயலலிதா. இவர்களும் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால் தடையை எதிர்த்து நெடுமாறன் தொடர்ந்த வழக்கு டிவிஷன் பெஞ்சில் நிலுவையில் இருக்கிறது. ஆக, ஒரு கட்சியையோ அமைப்பையோ இயக்கத்தையோ தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிமை உண்டு''’’என்கிறார் நீதிமான் சந்துரு.

இதற்கிடையே தடை எச்சரிக்கை குறித்து பா.ம.க.தரப்பும் அலசி ஆராய்கிறது. இதுகுறித்து பா.ம.க. வழக்கறிஞர்களோ,’’""பதிவு செய்யப் பட்ட ஒரு அரசியல் கட்சி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வருகிறது. சங்கம், அமைப்பு என்பதற்கு மேலே சென்றுவிடுகிறது அரசியல்கட்சி. அதனால் ஒரு அரசியல் கட்சியை சங்க மாகவோ அமைப்பாகவோ பார்க்க முடியாது. மேலும் கிரிமினல் லா அமெண்ட்மெண்ட் சட்டத்தை பொறுத்த வரை அதில் சொல் லப்பட்டுள்ள ஷரத்துகளில் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. எனவே ஒரு அரசியல் கட்சியை மாநில அரசால் தடை செய்ய முடியாது'' என்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட்டாகியிருக்கும் மருத்துவர் ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் செய்தது டாக்டர் செங்குட்டுவேல் தலைமையி லுள்ள மருத்துவக்குழு. அப்போது இதய குழாயில் ஒரு அடைப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென தெரிவித்தனர் டாக்டர்கள். அதற்கு ராமதாஸும் அவரது மனைவி சரஸ்வதி, மகன் அன்புமணி ஆகியோர் ஒப்புக்கொண்டனர். சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை ராம தாஸுக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்துள்ளனர். 

ராமதாஸின் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப் படுகின்றனர். அவரை பார்க்கும் உறவினர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால், ""சாதாரண ஒரு அறுவை சிகிச்சைதான். இதை கண்டு பயப்படத்தேவையில்லை. நீங்கள் அழுவதாக இருந்தால் இங்கிருந்து போய்விடுங்கள். இனி வராதீர்கள். நீங்கள் அழுது என்னை பலகீனமாக்காதீர்கள்'' என திடமாக பேசுகிறார் ராமதாஸ். 

அவரை சந்தித்துவிட்டு வரும் உறவினர் களிடம் பேசிய போது, ""ஏற்கனவே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள்தான் இதய குழாயில் அடைப்பு ஏற்பட காரணம்'' என்கின்றனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்த ஒரு அரசியல் கட்சி ஈடுபட்டாலும் அதனை தடை செய்யும் ஆபரேசனில் உறுதியாகவே இருக்கிறார் ஜெயலலிதா. அந்த ஆபரேச னில் உறுதியாக அவர் இருப்பதை அறிவிக்கும் விதமாக, 1998 கிரிமினல் லா அமெண்ட் மெண்ட் சட்டத்தின்படி உள்ள தீர்ப்பாயம் குறித்த அறிவிப்பை கடந்த 4-ந்தேதி கெஜட்டில் வெளியிட்டுள்ளது அரசு.

ad

ad