புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2013

முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவேளை தவறுதலாக பாலத்திற்குள் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இறப்பு தொடர்பில் என்ன நடந்திருக்கலாம்
என்பதை எவரும் உறுதிசெய்யவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 54 ஆவது பிரிகேட் படையணியினை சேர்ந்த படையினர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.
குறித்த பாலத்திற்குள் துவிச்சக்கர வண்டி கிடப்பதை கண்டு மக்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இரு படையினரின் உடலங்களையும் மீட்டுள்ளார்கள்.
குறித்த படையினரின் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட படை அதிகாரி உதயபெரேரா மாங்குளம் காவல்துறை அதிகாரி அமரசிங்க உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இரு படையினரின் உடலங்களும் கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனையின் பின்னர் தென்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad