புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்க விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் மீளவும் தெரிவித்துள்ளார்.
எனினும், இதுவரையில் இலங்கை அரசாங்கம் தமது கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சனல்4  ஊடகத்தின் ஒரு வீடியோ உண்மையானது என 2011ம் ஆண்டின் ஏப்ரலில் கிறிஸ்டோப் ஹென்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவே அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இலங்கை விவகாரத்தில் ஆக்கபூர்வமாக இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ad

ad