புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2013


பாமகவை வளைக்கும் திமுக…. கூட்டணியில் இருந்து விலகுகிறதா விடுதலை சிறுத்தைகள்?

சென்னை: தேர்தல் நெருங்க நெருங்க களங்களும் காட்சிகளும் மாறும் என்பது இந்திய அரசியலில்
எழுதப்படாத நியதி.. தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக அரசியல் களமும் திருப்பங்களை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தனித்தே தேர்தலை சந்திப்போம் என்று பிரகடனம் செய்தது அதிமுக. இருப்பினும் தற்போதைய நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக இந்த அணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக் வன்னியர் வாக்குகளை பெறுவதற்காக தனிக் கட்சி தொடங்கியிருக்கும் பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இணைத்துக் கொண்டு இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தவும் அதிமுக முயற்சிக்கலாம்.. இந்த நிலையில் திமுக கூட்டணியில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மரக்காணம் கலவரத்தையடுத்து ஜெயலலிதா அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறது. ஆனால் திமுகவோ அதிமுக அரசை விமர்சித்து வருவதுடன் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தும் வருகிறது. இதனால் ‘எந்த திராவிட’ கட்சியுடனும் ஒருபோதும் கூட்டணி இல்லை என்ற பாமகவின் கோஷம் வழக்கம் போல வெற்று கோஷமாகும் நிலைமை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில்தான் தாம் தொடருகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருக்கிறார். ஆனால் திமுகவோ தமது எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனை டாக்டர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி நலம் விசாரித்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி சார்பில் ‘தூதராக’ சென்ற இளங்கோவன், ராமதாஸின் மகன் அன்புமணியை சந்தித்துப் பேசியிருக்கிறார். தமிழக அரசியலில் இப்படியான ‘எதிர்பாராத’ சந்திப்புகள்தான் கூட்டணிக்கு அச்சாரம் போடக் கூடியவை.. தேமுதிக தங்களது அணிக்கு வருமா? வராதா? என்ற இழுபறியில் திமுக இருக்கும் நிலையில் பாமகவையாவது அழைத்துக் கொள்ளலாம் என்றே திமுக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எந்த நேரத்திலும் தலைமைச் செயலகத்துக்கு சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, மரக்காணம் சம்பவத்துக்காக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கக் கூடும் என்றே கூறப்படுகி


ad

ad