புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2013



மனைவி போலவே வாழ்ந்ததால், கர்ப்பமாக உள்ளேன்! மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கைதான நடிகை கதறல்!
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார்.
லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு
லீனாவுடன் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றுக்கு சென்று இருக்கிறார். பெரிய திட்டம் ஒன்றை தொடங்குவதாக கூறி, அதற்காக அவர்கள் அந்த வங்கி கிளையில் ரூ.19 கோடி கடன் வாங்கி உள்ளனர்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக அந்த வங்கி கிளையின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் சுகாஷ் சந்திரசேகர், லீனா ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 120 பி (கிரிமினல் சதி), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து டெல்லி போலீசாரின் உதவியுடன் டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த நடிகை லீனா மரியா பாலை கைது செய்தனர். மேலும் அவருடைய பாதுகாவலர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆவார்கள். ஆனால், போலீசார் வருவதை அறிந்ததும் சுகாஷ் சந்திரசேகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நடிகை லீனாவை டெல்லி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் லீனா கதறி அழுதார். நான், சுகாசுடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அதன் விளைவாக நான் கர்ப்பமாக உள்ளேன். என்னை ஜெயிலுக்கு அனுப்பாதீர்கள், விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.
ஆனால் மாஜிஸ்திரேட்டு, 72 மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நடிகை லீனாவை பாதுகாப்பாக ரெயிலில் சென்னை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அவருக்கு துணையாக இருக்க, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டுள்ள இன்ஸ்பெக்டர் விஜயகுமாரும், நடிகை லீனாவை அழைத்துக்கொண்டு நேற்று இரவு டெல்லியில் இருந்து ரெயிலில் சென்னை புறப்பட்டனர். அவர்கள் வரும் ரெயில் 30.05.2013 வியாழக்கிழமை இரவு சென்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ad

ad